July 2024

தேவசெய்தி

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்

1 பேதுரு 1:19
THE PRECIOUS BLOOD OF JESUS CHRIST
REV.S.J.D. DHARMARAJA

ஜூலை மாதத்தில் நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் ஒன்று ‘இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்’ என்னும் செம்பொருள். உலக திருச்சபை இந்நாட்களில் “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தாலே மீட்கப்பட்டீர்கள்” (1பேது-1:19) என்ற தூய.பேதுருவின் வார்த்தைகளை தியானித்து வருகிறது. ‘விலையேறப்பெற்ற’ என்ற வார்த்தை, ‘விலை மதிப்பற்ற’ அல்லது ‘அருமைமிக்க’ என பொருள்படுகிறது. இது குறித்து, “பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப் படாமல்,” (வச-18) அவற்றை விட விலை யேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டீர்கள் என்று பேதுரு குறிப்பிடுகிறார். இதையே பவுல், “இரத்தின கற்களை விட விலையேறப்பெற்றவர் இயேசுவாகிய மூலைக்கல்” என 1கொரி-3:12ல் குறிப்பிடுகிறார். எனவே, கிறிஸ்துவின் இரத்தம் விலையேறப்பெற்றது, மதிப்புமிக்கது மற்றும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்வோம்.

ஆனால், இயேசுவின் இரத்தம் யாருக்கு விலையேறப்பெற்றது?
அது எவ்வாறு மதிப்புமிக்கது, விலையுயர்ந்தது மற்றும் தனித்துவமானது?

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், கடவுளுடைய பார்வையில் மாத்திர மல்ல விசுவாசிகளான நமது பார்வையிலும் விலையேறப்பெற்றதுதான்.

இயேசுவின் இரத்தம் கடவுளுக்கு விலைமதிப்பற்றது, ஏனெனில் அது அவரது சொந்த மகனின் இரத்தம்: பிதாவுக்கு, தமது மகனான இயேசுவைவிட விலை யேறப்பெற்றவர் வேறொருவரும் இல்லை. ‘இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரில் பிரியமாயிருக் கிறேன்’ என மத்-3:17ல் என இதை நாம் வாசிக்கிறோம்.

இயேசுவின் இரத்தம் கடவுளுக்கு விலையேறப்பெற்றது, ஏனெனில் அது தேவநீதியின் கனத்தை நிரூபிக்கிறது: தூய.பவுல் கூறுகிறார்: “தேவன், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருப்போரை நீதிமான்களாக்கி, தமது நீதியை காண்பிக்கும் பொருட்டாக, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோம-3:21-26)

இயேசுவின் இரத்தம் கடவுளுக்கு விலையேறப்பெற்றது, ஏனெனில் அது தேவநீதியின் கனத்தை நிரூபிக்கிறது: தூய.பவுல் கூறுகிறார்: “தேவன், இயேசுவினிடத்தில் விசுவாசமா யிருப்போரை நீதிமான்களாக்கி, தமது நீதியை காண்பிக்கும் பொருட்டாக, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோம-3:21-26)

வாசிகளாகிய நமக்கும் விலையேறப்பெற்றதாகும். அது சக்திவாய்ந்த அரணாகவும், விடுவிக்கும் குறிக்கோளுடைய ஆயுதமாகவும் இருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் நமக்கு விலையேறப்பெற்றது என்பதை ரூபிப்தற்கான வேதவசன ஆதாரங்களை சற்றே நாம் தியானிப்போம்.

1. இயேசுவின் இரத்தம் நமக்கு விலைமதிப்பற்றது, ஏனெனில் அது சம்பாதிக்கிறது: எதைச் சம்பாதிக்கிறது? அது, மீட்பை சம்பாதிக்கிறது; ஆத்துமாக்களை, விசுவாசக் கூட்டத்தை, திருச்சபையை சம்பாதிக்கிறது. தூய. பவுல் மிலேத்து பட்டணத்தில், எபேசு சபையாருடன் பேசும்போது, “தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்துக்கொண்ட தம் சபையை மேய்ப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களை கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்|” (அப்-20:28) என்று சொல்லு கிறார். பாவம் நம்மை அநியாயமாக்குகிறது; ஆனால், கிறிஸ்துவின் இரத்தம் நம்மை நியாயப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை விலையைக் கொடுத்து, நமக்கு விடுதலையை சம்மாதித்துத் தருகிறதாக இருக்கிறது. இயேசுவின் இரத்தத்தைக் கிரயமாகக் கொடுத்து, கடவுள் நமக்கு மீட்பைச் சம்பாதித்தார். ஆகவே, இயேசுவின் இரத்தம் விசுவாசிகளையும், விசுவாசக் குடும்பங்களையும் மட்டுமல்ல திருச்சபைகளை யும் சம்பாதிக்கிறது. இது குறித்து 1கொரி-7:23ல், தூய.பவுல், “நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்” என்றும்; 2பேது-2:1ல் தூய.பேதுரு, “உங்களை தமது இரத்த-கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலிக்கும்வகையில் கள்ளத் தீர்கதரிசிகளுக்கும் கள்ளப் போதகர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டாம்” என்றும் கூறுகின்றனர். கிறி;ஸ்து வின் இரத்தம் இவ்விதமாக நம்முடைய மீட்புக்கான விலையை-கிரயத்தை செலுத்தி நம்மை கடவுளின் பிள்ளைகளாக சம்பாதித்திருக்கிறபடியால் அது நமக்கு மிகவும் விலையேறப்பெற்றது ஆகும்.

2. இயேசுவின் இரத்தம் நமக்கு விலைமதிப்பற்றது, ஏனெனில் அது செலுத்துகிறது: அது எதைச் செலுத்துகிறது? நமது அநீதியின் கடனைச் செலுத்துகிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோம-6:23); “எல்லா மனிதரும் பாவம் செய்தவர்கள்” (ரோம-3:23), மேலும் “பாவ விமோசனத்திற்கான பணம் (கிரயம்) குற்றமற்ற கிறிஸ்துவின் இரத்தமே” (1பேது-1:18,19) என வேதம் சொல்லுகிறது. உண்மையில், கிறிஸ்துவின் இரத்தம் என்ற பணம் செலுத்தப் பட்டதாலேயே நாம் மீட்கப்பட்டோம். எகிப்தில் இஸ்ரவேலர்கள் மரணத்தில் இருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் மீட்கப்படும்பொருட்டு ஆட்டுக்குட்டி யின் இரத்தம் வீடுகளின் வாசல்களில் பூசப்பட்டத இது நினைவுபடுத்துகிறது. எனினும், கிறிஸ்துவின் இந்த செலுத்துதல் முற்றிலும் வேறுபட்டதாகும். இது, நம்மைப் போன்ற பாவிகளை சிறையிருப்பிலிருந்து மட்டுமல்ல, பாவப்-பிசாசின் பிடியிலிருந்தும் மீட்டெ டுக்கும் மாசற்ற இரத்தம். இந்த இரத்தம் உங்களுக்கு எவ்வளவு விலைமதிப்பை செலுத்தியிருக்கிறது? யோசித்துப் பாருங்கள்.

3. இயேசுவின் இரத்தம் நமக்கு விலைமதிப்பற்றது, ஏனெனில் அது சுத்தப்படுத்துகிறது: எதை சுத்தப்படுத்தகிறது? நம் உட்புறத்தை, மனசாட்சியை சுத்தப்படுத்துகிறது! எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர், பழைய - புதிய உடன்படிக் கையின் கீழ் சிந்தப்படுகிற விலங்குகள் மற்றும் கிறிஸ்துவின் இரத்தங்களுக்கு இடையேயான கூர்மையான வேறுபாட்டை வரைகிறார். அதாவது, கிறிஸ்துவின் இரத்தம் நம்மை உட்புறமாக சுத்தப்படுத்தி, நம் மனசாட்சியை தூய்மையாக்குகிறது. ஆக்டேவியஸ் வின்ஸ்லோ என்பார், ‘கிறிஸ்துவின் இரத்தம் - ஆன்மாவிற்கு ஒரு தெய்வீக குளியல்’ என்று எழுதுகிறார். இவ்வாறாக, நியாயப்படுத்தி - பாவநிவர்த்தி செய்து - தேவகோபத்தை தீர்த்து - ஆன்மாவை தூய்மைப்படுத்தும் கிறிஸ்துவின் இரத்தம் மிகவும் விலை யேறப்பெற்றது அல்லவா?

4. இயேசுவின் இரத்தம் நமக்கு விலைமதிப்பற்றது, ஏனெனில் அது பேசுகிறது: என்ன பேசுகிறது? யாரிடம் பேசுகிறது? ஆபேலின் இரத்தம் பேசியதை விட இயேசுவின் இரத்தம் சிறந்த வார்த்தையைப் பேசுகிறது என்று எபி-12:24ல் வாசிக்கிறோம். இது தரையில் இருந்து பழிவாங்கும் விதமாய் பேசவில்லை, மாறாக இது, கடவுளின் ராஜ்யம் மற்றும் மங்காத ஆசீர்வாதங்களைப் பற்றி பேசுகிறது. இயேசுவானவர், தேவனுடைய சந்நிதானத்தில் தமது இரத்தத்தின் எல்லையற்ற தகுதியை எடுத்துரைக்கிறார். அவ்வாறு, இயேசு நமக்காக பரிந்து பேசும் மன்றாட்டின் வழியாக இந்த இரத்தம் கடவுளிடம் பேசுகிறது. கிறிஸ்துவானவர், சிலுவையில், குற்றமற்ற தனது இரத்தத்தை ஊற்றியதின் வழியாய் அவரது இரத்தமானது பரலோகத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறது.

பிரியமானவர்களே! நம் பாவங்களை பரிகரித்து, நம்மை மீட்டெடுக்கும் விலையாக பரலோக ராஜா கொடுக்கும் கருஞ்சிவப்பு நிறமான பணமே இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தம். தேவமனிதராகிய சார்ல்ஸ் வெஸ்லி எழுதிய ‘எழுக! என் ஆன்மா எழுகிறது’ என்ற பாடலும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தம்! நமக்காய் பரிந்து பேச,
அவரது மீட்கும் அன்பு! நம்மை நேசிக்க,
அவரது இரத்தம்! நம் பாவங்களுக்காய் பரிகாரம் செய்ய,
அவரது இரத்தத்தில் இப்போது கிருபாசனம் ஒளிர்கிறது.


கிறிஸ்துவின் பணியில் உங்களுடன்
அருட்திரு.எஸ்.ஜே.டி. தர்மராஜா



அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா,
ஆயர் மற்றும் ஊழிய இயக்குநர், நற்செய்தி வேதாகம அச்சுப்பதிவு ஊழியங்கள், சாலிகிராமம், சென்னை-93, தென்னிந்தியா.