Quiz
September 2026

போட்டி எண்:191 (செப்டம்பர் 2026)


நீதிமொழிகள் புத்தகம் முழுவதும்

1-3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 4-12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-09-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. தகப்பனுடைய வார்த்தைகளைச் செவிசாய்த்துக் கேட்கும்பொழுது எதைப் பெற்றுக்கொள்ள முடியும் என சாலோமோன் ஞானி குறிப்பிடுகிறார்?
2. பிரம்மாண்டமான ஒரு விருந்தை ஆயத்தம் செய்த பெண் யார்? 3. ‘பெருநெஞ்சன்’ என்ற வார்த்தையை, திருவிவிலியம் மற்றும் பரிசுத்த பைபிள் ஆகியவை இணைத்திருமறையில் எவ்வாறு குறிப்பிடுகின்றன?
4. வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாய் இருக்கிறது யார்?
5. விரோதங்களை ஒழித்து பலவான்கள் நடுவே சிக்கறுப்பது எது?
6. எது இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்?
7. ‘தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடைவான்’ - சரியா தவறா?
8. ‘துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்’ - சரியா தவறா?
9. ‘முத்துக்களைப்பார்க்கிலும் மானமே நல்லது’ - சரியா தவறா?
10. ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த ‘இது’ முடிவிலே ஆசீர்வாதம் பெறாது: அ) வெற்றி ஆ) வருமானம் இ) சுதந்திரம் ஈ) ஆதாயம்
11. விவேகமுள்ள மனுஷன் ‘இதை’ அடக்கி வைக்கிறான்:
அ) ஆசையை ஆ) கோபத்தை இ) நாவை ஈ) அறிவை
12. சீட்டு ‘இங்கே’ போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்:
அ) பெட்டியிலே ஆ) மடியிலே இ) தரையிலே ஈ) பையிலே
13. ஞானம் வாங்கப் போகிறான்! பணம் கொண்டு போகிறான்! மனம் இன்றிப் போகிறான்! யார் அவன்?
14. மூன்று இவை மூன்று! மூன்று இவை மூன்று! தாழ்மைக்கு பலன் இவை மூன்று! தெய்வபயத்துக்கு பலன் இவை மூன்று! எவை இந்த மூன்று! எவை இந்த மூன்று?
15. பால் நல்ல பால், பருகும்-ஆகாரம் உனக்கிந்த பால்! பால் நல்ல பால், பருகும்-ஆகாரம் உன் வீட்டாருக்கிந்த பால்! பால் நல்ல பால், பணிப்பெண்கள் ஊதியம் உனக்கிந்த பால்! என்ன பால்? இது என்ன பால்?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா