Angel C
EPISODE-88
September 2026

‘யேகோவா சாகார் ’

Jehovah Zakhar

நினைத்தருளுகிறவர்

THE LORD WHO REMEMBERS

தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.யாத்.2:25

God looked upon the children of Israel; and, God remembered them. Exo.2:25

சர்வத்தையும் தமது வல்லமையுள்ள வசனத்தால் தாங்குகிற இயேசுவானவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு செப்டம்பர் மாதத்தின், விசேஷித்த நல்வாழ்த்துக்கள்.

யாரையெல்லாம் நினைத்து ஆசீர்வாதம் அருளுகிறார்?

1சாமு.1:10-19 கசப்பு நிறைந்த, நிந்தையும் அழுகையுமான வாழ்வின் மத்தியிலும் கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றி பொருத்தனையுடன் விண்ணப்பம்பண்ணின உங்களை அவர் நினைத்து, “நீ சமாதானத்துடன் போ, உன் விண்ணப்பத்தின்படி உனக்குக் கட்டளையிடுகிறேன”; என்கிறார்.

ஆதி.8:1 பல வருடங்களாக எப்பக்கத்திலும் அடைபட்ட நிலை, ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டப்பட்ட நிலை. ஆசீர்வாதங்களைக் காணாக்கூடாதபடி கண்கள் கட்டப்பட்ட நிலை. இதின் மத்தியிலும் நீதிமானாக உத்தமனாக வாழ்ந்த உங்களுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததால், இதுவரை வெளியே வரமுடியாதபடி தடையாக இருந்த ஜலப்பிரளயம் வற்றி, காய்ந்து போகும்படி செய்து, ஒருவரும் பூட்டக்கூடாதபடி ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்” என்கிறார்.

யாத்.2:23-35 பிசாசினால் உண்டான அடிமைத்தன வாழ்வில், தீய பழக்கங்களில் சிக்கித்தவித்து விடுதலைவேண்டி தேவனிடம் முறையிடுகிறவர்களுடைய பெருமூச்சின் சத்தம் தேவசந்நிதியில் போய் எட்டியதால், கர்த்தர் முழு விடுதலை அருளுகிறார்.

ஜெபம்: எங்கள் தகப்பனாகிய இயேசு மாஹாராஜாவே! உமக்கு ஸ்தோத்திரம் (சங்.115:12). உலகத்தார் மத்தியில் உமக்குப் பயந்து, உம்மையே நம்பியிருக்கிற எங்களை நினைத்தருளி ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவீராக. இயேசுவின் நாமத்தில், பிதாவே. அல்லேலூயா, ஆமென்.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா