வேத-பகுதி: 2 இராஜாக்கள்
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.
கடைசி நாள்: 25-09-2025
1. எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தது யார்?
2. எக்ரோனின் தேவனுடைய பெயர் என்ன?
3. குதிரைகளோடும் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியில் நின்றது யார்?
4. ‘இந்த ஜனங்களுக்கு கண்மயக்கம் உண்டாகச் செய்யும்’ - இது யாருடைய ஜெபம்?
5. மத்தனியாவை ராஜாவாக்கி அவனுக்கு பாபிலோன்ராஜா இட்ட மறுபெயர் என்ன?
6. சமுக்காளத்தை தண்ணீரில் தோய்த்து பெனாதாத் முகத்தின்மேல் விரித்தது யார்?
7. ஒலிமுகவாசலில் ஜனங்கள் நெருக்கி மிதித்ததால் செத்துப்போனது யார்?
8. எலியாவின் மேலிருந்து கீழேவிழுந்த சால்வையை எடுத்தது யார்?
9. ‘குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்| - சரியா தவறா?
10. ‘யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்’ - சரியா தவறா?
11. ‘எலியா சுழற்படிகளிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்’- சரியா தவறா?
12. ‘சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்’ - சரியா தவறா?
13. அத்தாலியாளை ராஜாவின் அரமனை அருகில் ‘இதால்’ கொன்றுபோட்டார்கள்:
அ) ஈட்டி ஆ) பட்டயம் இ) வாள் ஈ) தூக்குமரம்
14. ‘இது’ பத்து பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான் எசேக்கியா:
அ) வில் ஆ) சாயை இ) நிழல் ஈ) ஒளிவட்டம்
15. ஆகாபுக்கு ‘இங்கே’ எழுபது குமாரர் இருந்தார்கள்:
அ) சமாரியாவில் ஆ) கிபியோனில் இ) எருசலேமில் ஈ) தீருவில்
16. ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் ‘இது’ தண்ணீரில் விழுந்தது:
அ) மரம் ஆ) கிளை இ) அரிவாள் ஈ) கோடரி
17. பெத்தேலில் தீர்க்கரைக் கண்டோம், பெருமையாய் கேள்வியை கேட்டோம்! எரிகோவில் தீர்க்கரைக் கண்டோம், எடுத்தெரிந்து
கேள்வியை கேட்டோம்! யோர்தானில் தீர்க்கரைக் கண்டோம், யோசனையாய் தூரத்தில் நின்றோம்! நாங்கள் யார்? நாங்கள் யார்?
18. இரண்டு ராஜா இசைவுடனே போன வழி! மூன்றாம் ராஜா முனைப்புடனே இணைந்த வழி! ஏங்கித் தவித்து ஏழு நாட்கள் சுழன்ற
வழி! இது எந்த வழி?
19. ஃபர்ஸ்ட் ஃபுளோரில் ரூம் கட்டிய பணக்காரி! படுக்கை-மேஜை ஃபர்னிஷ் செய்த பாக்யசீலி! பரிசுத்தவானை பராமரித்த
பக்தசீலி! யார் இவள்?
20. ஏழு தும்மல் போட்டான், ஏறெடுத்துப் பார்த்தான்! எழுந்திருந்து அமர்ந்தான், எடுத்துச்செல்ல வியந்தான்!
தேவமனிதன் ஜெபித்திடவே, மரித்த-இவன் உயிர்த்தான்! இவன் யார்?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463