Angel C
EPISODE-76
September 2025

ஹேப்பெட்ஸ் அதோனாய்

Hapetz - Adonai

உன்மேல் பிரியமாயிருக்கிறவர்

THE LORD WHO DELIGHTS IN YOU

நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார். ஏசாயா-62:4பி

But thou shalt be called Hephzibah, and thy land Beulah: for the Lord delighteth in thee. Isa 62:4b

ஜாதிகளுக்கு நேராக தம் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக தன் கொடியை ஏற்றுகிற கர்த்தராகிய ஆண்டவரின் நாமத்தில், இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு செப்டம்பர் மாத அன்பின் நல்வாழ்த்துக்கள்.

சங்.33:5 கர்த்தர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்.

நாம் யார்? தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தும்படிக்கு பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள் (1பேது.2:5).

யார் மீது பிரியமாயிருக்கிறார்? தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருச்கிறார் (சங்.147:11).

சங்.1:2 கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கிறவர்கள் மேல் பிரியமாய் இருக்கிறார்.

சங்.37:23 நல்ல மனுஷனுடைய வழியின்மேல் பிரியமாயிருக்கிறார்.

2கொரி.9:7 பரிசுத்தவான்களுக்கு உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் பிரியமாய் இருக்கிறார்.

தானி.9:4-21 எழுதியிருக்கிறபடி தன் ஜனத்துக்காக திறப்பிலே நிற்கிறவர்கள் மேல் பிரியமாயிருக்கிறார்.

சங்.143:10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்து, என்னை வழிநடத்துவீராக.

ஜெபம்: பிரியமான எங்கள் அன்பு தகப்பனே! உமக்கு ஸ்தோத்திரம். இஸ்ரவேலராகிய எங்களை ஆசீர்வதிப்பது உமக்கு பிரியமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம். பென்யமீனை ஆசீர்வதித்ததுபோல் எங்கள் எல்லையில் வாசமாய் இருப்பீராக. உம்மோடு சுகமாய் தங்கியிருக்கும் அபிஷேகத்தி னால் நிரப்பி, எங்கள் கைகளின் கிரியையை உறுதிப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில், ஆமென் பிதாவே. அல்லேலூயா!

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா