பிரசங்கி புத்தகம் முழுவதும்
1-3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,19,20) 4-12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன
வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-09-2026
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
1. இரகசியமாகப் பேசப்படும் வார்த்தைகளைக்கூட காற்றில் பறந்துசென்று அரசனிடம் போட்டுக்கொடுக்கும் ஒற்றன் யார்?
2. பிரசங்கி 12ம் அதிகாரம், எதை, ஒரு கவிதைபோல் விவரிக்கிறது?
3. ‘தேவனுடைய அநுக்கிரகம்’ என்ற வார்த்தையை, சத்தியவேதம் மற்றும் பரிசுத்தபைபிள் ஆகியவை இணைத்திருமறையில் எவ்வாறு
குறிப்பிடுகின்றன?
4. பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப் போல் இருப்பது எது?
5. யாருடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்?
6. மாயை மாயை எல்லாம் மாயை என்று சொல்லுகிறது யார்?
7. ‘அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு’ - சரியா தவறா?
8. ‘நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்’ - சரியா தவறா?
9. ‘யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே பலம்’ - சரியா தவறா?
10. வெளிச்சம் இன்பமும், ‘இதை’ காண்பது கண்களுக்கு பிரியமுமாம்:
அ) சூரியனை ஆ) சந்திரனை இ) விடிவெள்ளியை ஈ) விண்மீனை
11. எல்லாம் ஒரே இடத்துக்கு போகிறது; எல்லாம்; ‘இதிலே’ உண்டாகிறது:
அ) மண்ணிலே ஆ) சுவாசத்திலே இ) கருவிலே ஈ) வேரிலே
12. ‘இவன்’ தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்:
அ) அரக்கன் ஆ) பேதை இ) துன்மார்க்கன் ஈ) மூடன்
13. முகத்தின் மினுமினுப்பை ஏற்றும்!
முகத்தின் மூர்க்கத்தை மாற்றும்! இது என்ன? இது என்ன?
14. ஊருக்கு வழிகேட்கும் தொல்லை இவன்!
உளறிடும் வாய்பிறப்பில் மதியீனன்!
ஓவராக பேசிநிற்கும் அறிவீனன்! இவன் யார்? இவன் யார்?
15. வளைத்திடும் வளை-கோல்கள் இவை!
பிணைத்திடும் பிணை-ஆணிகள் இவை!
மேய்த்திடும் நல்லாயன் தந்தவை இவை!
இவை எவை? இவை எவை?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463