Angel C
EPISODE-89
October 2026

‘எலிமோன் தியோஸ்’ ’

Eleimon Theos

தயையுள்ளவர்

THE GRACIOUS GOD

கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசித்ததுண்டானால், திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1பேது.2:1,3

Desire the sincere milk of the word, if so, be you have tasted that the Lord is gracious. 1Pet.2:2,3

கிருபை, இரக்கம், நீடியசாந்தம், மகாதயை, சத்தியம் நிறைந்த தேவநாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு அக்டோபர் மாத, கிருபையின் வாழ்த்துக்கள்.

தயை என்கிற செங்கோலை நீட்டுகிறார்.

சங்.102:13 கர்த்தர் நமக்கு நன்மைசெய்வார் என்ற விசுவாசத்துடன் காத்து இருக்கிறவர்களுக்கு தமது சிங்காசனத்திலிருந்து எழுந்தருளி தம்முடைய இரக்கத்தினால் தயை செய்கிற காலத்தையும் நேரத்தையும் கொண்டுவருகிறார்.

யாத்.33:19 பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிற பிள்ளைகளுக்கு தமது மகிமையைக் காட்டி, தமது தயையை எல்லாம் உங்களுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுகிறார்.

எஸ்.2:9-17 தன்னைக் காண்கிற எல்லாருடைய கண்களுக்கும் தயை கிடைக்கும்படி கர்த்தர் செய்கிறார்; அவர் வைத்துள்ள ஆசீர்வாதமான ராஜகிரீடத்தைச் சூட்டுகிறார்.

1சாமு.1:18 உபவாசத்துடன் காத்திருந்து, காத்திருந்து, சோர்ந்துபோன பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயை கிடைத்ததால், அவர்களை போஜனம் பண்ணச்செய்து, அவர்களுடைய துக்க முகத்தை மாற்றுகிறார்.

ஏசா.55:7 தவறை உணர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்போது, மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவராய் இருக்கிறார்.

ஜெபம்: ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையம் தயையையும் காக்கிற உண்மை யுள்ள தேவனே! உம்மைத் துதிக்கிறோம். எங்களை ஆசீர்வாதத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் உண்மையுள்ள பிதாவே. அல்லேலூயா, ஆமென்.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா