கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
2026ம் ஆண்டின் 10வது மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் துங்காதி துங்கவர் இயேசுவின் பாதம், பணிந்து தொழுவோம். இம்மாதம் 2ம் தேதி நம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் (GANDHI JEYANTHI), 25ம் தேதி சீர்திருத்த ஞாயிறு (REFORMATION SUNDAY), 28ம் தேதி அப்போஸ்தலரும் இரத்தசாட்சிகளுமான தூய.ததேயு எனப்பட்ட யூதா மற்றும் தூய.செலோத்தே எனப்பட்ட சீமோன் ஆகியோரின் திருநாட்கள் (FEAST DAY OF THE APOSTLES AND MARTYRS ST.JUDE THADDAEUS AND ST.SIMON THE ZEALOT), 31ம் தேதி சீர்திருத்த திருநாள் (REFORMATION DAY) ஆகிய திருநாட்களை நாம் ஆசரிக்கிறோம். இந்நாட்களை ஜெபத்துடன் ஆசரித்து, ஆசீர்வாதம் பெற உங்களை அன்புடன் நினைவுபடுத்துகிறோம்.
ஜெப-ஜன்னல்-PWPM, வேதாகம-போட்டிகள்-RBKC, அனைவரும்-ஊழியத்தில்-AIMS திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியம், வலைதள ஊழியம் (www.ratchippu.com), புத்தக வெளியீட்டு ஊழியம், காணொலி-செய்தி ஊழியம், ‘நல்ல-விதைகள்’ கைப்பிரதி ஊழியம், NMSI மிஷனரி ஊழியம், திருச்சபை ஊழியம் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். வலைதள பதிவிற்கான லிங்க்: https://magazine.ratchippu.com 2015 ஆண்டு முழுமைக்கும் சரியான பதில்கள் எழுதி பரிசு பெற்றோர் பட்டியல் லிங்க்: https://magazine.ratchippu.com/quizWinners2025.html
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.