வேத-பகுதி: 1 நாளாகமம்
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.
கடைசி நாள்: 25-10-2025
1. லேவியருக்குள்ளே சங்கீதத் தலைவனாயிருந்தவன் யார்?
2. தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே எவ்வளவு காலம் இருந்தது?
3. இஸ்ரவேலை தொகையிடுவதற்கு தாவீதை ஏவிவிட்டது யார்?
4. தன் பட்டயத்தை உறையிலே திருப்பப்போட தேவதூதனுக்கு சொன்னது யார்?
5. பஞ்சலோக கைத்தாளங்களை தொனிக்கப்பண்ணி பாடியவர்கள் யார், யார்?
6. ஓபேத் போவாஸின்; மகன்; ஓபேதின் மகன் யார்?
7. பலகணிவழியாய் பார்த்து, தாவீதுராஜா ஆடிப்பாடி வருவதை கண்டது யார்?
8. ஆதாத்-ராஜா மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்கள் எத்தனைபேர்?
9. ‘தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்’ - சரியா தவறா?
10. ‘பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல மறைகிறது’ - சரியா தவறா?
11. ‘எருசலேமையும் அழிக்க தேவன் சாத்தானை அனுப்பினார்’ - சரியா தவறா?
12. ‘யோவாப், ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்’ - சரியா தவறா?
13. நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் ‘இவருக்கு’ முன்னே மரித்தார்கள்:
அ) ஆசாரியனுக்கு ஆ) தகப்பனுக்கு இ) ராஜாவுக்கு ஈ) தாய்க்கு
14. ‘இதை’ அபினதாப் வீட்டிலிருந்து புது ரதத்தில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்:
அ) மோசேயின் கோல் ஆ) கிருபாசனம் இ) ஏபோத் ஈ) தேவனுடைய-பெட்டி
15. தேவன் ‘இவனுக்கு’ 14 குமாரரையும் 3 குமாரத்திகளையும் கொடுத்தார்:
அ) ஏமானுக்கு ஆ) ஆசாபுக்கு இ) சவுலுக்கு ஈ) அனனியாவுக்கு
16. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், ‘இது’ என்றுமுள்ளது:
அ) அவர்-மகிமை; ஆ) அவர்-வல்லமை இ) அவர்-ராஜ்யம ஈ) அவர்-கிருபை
17. என் தாத்தாவின் தாத்தா பெயர் நோவா! என் மகன்களில் முதல்வன் பெயர் பேலேகு! உலகத்தை உழுதவன் பேலேகு, பூமியை
பிளந்தவன் பேலேகு!
என் பெயர் என்ன? என் பெயர் என்ன?
18. தாயாரின் துக்கத்தில் பிறந்தேன்! தமையரின் மத்தியில் சிறந்தேன்!
தேவனின் சமூகத்தின் ஜெபித்தேன்! நான் யார்? நான் யார்?
19. வீதி வலம் வந்த பெட்டி! பாதிவழி நின்ற பெட்டி! வீடு மாறி சென்ற பெட்டி!
இது யாருடைய பெட்டி? இது யாருடைய பெட்டி?
20. தலைவிட்டு தலை-மாறி விட்டேன்! நாடுவிட்டு நாடு-மாறி சென்றேன்!
தங்கத்தின் தங்கம் நான்! மாணிக்க மகுடம் நான்! நான் யார்? நான் யார்?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463