செயின்ட் பால் கல்லூரி வளர்ச்சி அடைந்தது. 1556ம் ஆண்டு தொடக்கப்பள்ளியில் சுமார் 450 சிறுவர் களும் நடுநிலைப்பள்ளியில் 13-15 வயதுள்ள 40 சிறுவர்களும் இருந்தார்கள். மேற்கத்திய மற்றும் பழமை கலந்த பாடத்திட்டம் இருந்தது. இலக்கண இலக்கிய கூறுகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே, வரலாறு, நுண்ணறிவு, உளவியல், தார்மீகம் போன்ற பிற படிப்புகளில் தேர்வு வழங்கப்பட்டது. பைபிளை எந்த பாடத்திட்டத்திலும் சேர்க்கவில்லை. ஆனால், ஒழுக்கநெறி (தார்மீக இறையியல்), பிஷப். கார்னிரோவால் கற்பிக்கப்பட்டது. கிரேக்கம் கைவிடப்பட்டது.
கோவாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ வாஸ் என்ற இந்தியர், செயின்ட் பால் கல்லூரியின் முதல் மாணவராவார்; போர்த்துகீசிய மொழிப்புலமை, மொழிபெயர்ப்பு திறன், முன்மாதிரி-நடத்தை உடையவர். அவரை கோவாவின் பாதிரியாராக எத்தியோப்பியாவின் பேட்ரியார்க் நியமித்தார். 1558ம் ஆண்டு மே-19 அசென்ஷன் நாளன்று முதல் திருப்பலியை புதிய பாதிரி யாரான ஆண்ட்ரூ வாஸ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரியில் கவர்னர் உடனிருந்தார்; தேவாலயம் போர்த்துகீசியர்களால் நிறைந்தது. கிராமத்திலிருந்து வந்திருந்த ஆண்ட்ரூவாஸின் தாய் மற்றும் உறவுகள், காணிக்கைசெலுத்த முன் வந்தபோது ஆனந்தக் கண்ணீருடன் அவரது கைகளில் முத்தமிட்டனர். ஆனால், இந்திய போதகர் நியமனத்திற்கு, இயேசு சங்கத்தின் சேவியர் எதிராகவே இருந்தார்.
பீட்டர் லூயிஸ் என்ற ஒரு பிராமணர், 1547ல் தம் 15ம் வயதில் குயிலானில் கிறிஸ்தவரானார். அவர், 1555ல் கோவாவில் உள்ள கல்லூரியில் சேர்ந்து, இலக்கணம் மற்றும் சொல்லாட்சியைப் படித்தார். பின்னர் 5 ஆண்டுகள் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார். அவர், ஜேசுயிட் சமூகத்தில் சேர விருப்பம் தெரிவிதது, ரோமில் உள்ள ஜெனரலுக்கு நவம்பர் 1559ல், கடிதம் எழுதினார். இதற்கு திருதந்தை போலன்கோ, ‘ஜேசுயிட் சமூகத்தில் இந்தியர் இணைவது கடினம், எனினும், கடவுள் யாரை அழைகிறாரோ அவருக்கு அனுமதிமறுப்பது தவறு என்பதால் பீட்டர் லூயிஸை கட்டாய துறவறப் பயிற்சிக்கு (novitiate) பரிந்துரைக்கிறேன்’ என பதில் கடிதம் எழுதினார் (டிச-31). தொடர்ந்து, 1561ம் ஆண்டு பீட்டர் லூயிஸ், ஜேசுவைட் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிக கடினப்பாடுகள் மத்தியில் துறவற பயிற்சியை கோவாவில் மேற்கொண்டார். பின்னர், அவர் கேரளாவில் பணியமர்ந்தார். மொழிகள் பற்றிய அறிவில் பீட்டர் லூயிஸ் சிறந்தவர்; ஆகையால், இந்திய மொழிகளில் போதனைகளை அச்சிட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். 1575ம் ஆண்டு வரை பாதிரியார் பணிக்கான ஆணை அவருக்கு வழங்கப்படவில்லை. அவர் 1596ம் ஆண்டில் இறந்தார். வேறொரு இந்தியர் ஜேசுயிட் சமூகத்தில் சேர்க்கப் படுவதற்கு நீண்ட பல ஆண்டுகள் ஆயின.
போர்த்துகீசியரின் 60 ஆண்டுகளில், இந்தியாவில் சுவிசேஷத்திற்கு ஏற்பட்ட முக்கிய தடை களில் ஒன்று, ‘ஜேசுயிட் சமூகம் இந்து மதத்தை அறிந்துகொள்ள நாட்டம் செலுத்தவில்லை’ என்பதுதான். 1559ல் கோவா தீவில் ஒரு இளம் பிராமணர் நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, ‘புனித சடங்குகள் கூடாது’, ‘வைஸ்ராய் காட்பாதராக இருக்கும் சிறப்பு-விதி கூடாது’ போன்ற தன் நிபந்தனைகளுடன் ஞானஸ்நானம் பெற்றார்; அநேக திருத்தந்தைகளுடன் தொடர்பிலிருந்த இவரது ஞானஸ்நானப் பெயர் மனோவேல்-டி-ஒலிவிரா (Manoel D’oliveira). இந்து மத தீர்க்கத் தரிசியான ஒரு பிராமணர் இருந்தார். இவர் 8-வருடங்களில் பண்டைய சமஸ்கிருத புத்தகங்கள் மற்றும் வியாசரின் 18 புத்தகங்களை மராட்டியில் மொழிபெயர்த்தவர். இவரை மனோவேல் அறிந்திருந்தார். ஒரு நாள் மனோவேல், ஜலசந்தியைக் கடந்து அந்த பிராமணர் வீட்டிற்குள் நுழைந்து, அவரது முழு நூலகத்தையும் எடுத்துவந்துவிட்டார். கல்லூரி யில் தங்கியிருந்த மனோவேல், இந்துமத புத்தகங்களின் முதன்மைப்பிரிவுகள் பலவற்றை போர்த்துகீசியத்தில் மொழிபெயர்த்தார். பிராமணர்களின் வாதங்களை குழப்பும் வகையில் அவரது படைப்புகள் இருந்தன. திருத்தந்தைகள், பகவத்கீதை பற்றி அறிய இந்த மொழிபெயர்ப்பு கள் உதவின. மொழிபெயர்ப்புகளை நகலெடுக்கும் பணியைச் செய்த செயின்ட் பால் கல்லூரி மாணவர்கள் அதை துல்லியமாய் செய்யவில்லை.
கோவாவில் போர்த்துகீசியம் அதிகம்; பேசப்பட்டது. இளம் ஜேசுயிட்கள் கொங்கன் மொழியைப் படிக்க கோவா மாணவர்கள் உதவினர்;. 1567ல் இளம் ஜேசுயிட்கள் 2பேர் பாதிரி யாராக நியமிக்கப்பட்டபின், கொங்கன் பேசும் பாதிரியார்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. கோவாவின் 3ம் கவுன்சில் (1585), தேசங்களுக்கு ஏற்ப கிறிஸ்தவ கோட்பாடு இருக்க வேண்டும் என்றும் அது போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்தது. 1549ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் ஸ்டீவன்ஸ் என்பவர் 1570ல் ஜேசுயிட் சமூகத்தில் சேர்ந்து, 1579ல் இந்தியப்பணிக்கு அனுமதிபெற்று, கோவாவி;ல் 6மாத இறையியல் ஆய்வுக்குப்பின் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவில் 40ஆண்டுகள் பணிபுரிந்த முதல் ஆங்கிலேயராவார். ஸ்டீவன்ஸின் புகழ், அவர் மராத்தியில் நேர்த்தியாய் எழுதியுள்ள, 10,962 சரணங்களுடைய பிரபலமான ‘விவிலிய வரலாற்றுப் புராணம்’ மூலம் விளங்கும். இதன் முதற்பகுதியில் பழைய ஏற்பாடும் 2ம் பகுதியில் இயேசு-சரிதையும் 3ம் பகுதியில் கர்த்தரின் வருகை குறித்த தீர்க்கதரிசனங்களும் அடங்கும்.
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...