Ho Aster’o Lampros’o Proinos
THE BRIGHT MORNING STAR
நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன். வெளி. 22:16பி
I am the root and the offspring of David, and the bright morning star. Rev. 22:16b
வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போன்ற முகத்தை உடைய இயேசுவானவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு அக்டோபர் மாத மகிமையின் வாழ்த்துக்கள்.
நம் வாழ்வில் எப்படியெல்லாம் இயேசு பிரகாசிப்பார்?
யாத்.34:28-35 மோசேயைப்போல் தனித்து உபவாசித்து கர்த்தருடைய பாதத்தில் காத்திருக்கும் போது மற்றும் ஆலயத்தில் தேவபிரசன்னத்தில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கும்போது நம்மை பிரகாசிக்கச்செய்கிறார்.
சங்.62:2 தேவனுடைய முகத்திலிருந்து வரும் ஒளி நம்மை பிரகாசிக்கச் செய்கிறது.
ஏசா.62:1 தேவனுடைய பாதத்தில் நாம் சிந்துகிற கண்ணீர், அவரை மௌனமாய் இருக்க விடாமல் செய்து, நீதி மற்றும் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டாகும்படி செய்கிறது.
நீதி.4:18 இருள், கிரியைசெய்ய முடியாத ஒளியின் பிரகாசத்தை நடுப்பகல் சூரிய வெளிச்சம் போல் நம் பாதையெங்கும் அதிகமாய் பிரகாசிக்கச் செய்கிறார்.
எபே.1:19 பிதாவானவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்று அறியும்படிக்கு நம் மனக்கண்களை பிரகாசிக்கச் செய்கிறார்.
1பேது.1:19 இருளடைந்த இருதயங்களில் தமது மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றப் பண்ணி, நம் இருதயங்களை பிரகசிக்கச்செய்து நம் முகங்களை மகிமையின் பிரகாசம் நிறைந்த வைகள் ஆக்குகிறார். (2கொரி.3:7, 2கொரி.4:6)
ஜெபம்: புறஜாதிகளுக்கு இயேசுவை அறிவிக்கிற ஒளியாக எங்களை அபிஷேகம் செய்பவரே! உமக்கு ஸ்தோத்திரம். உமது பயங்கரமான மகத்துவத்தை எங்கள் மூலம் வெளியரங்கமாக்கு வீராக. இயேசு என்ற நீதிக்குள் ஆத்துமாக்களை கொண்டுவரும் நட்சத்திரங்களாய் பிரகாசிக்க எங்களை அபிஷேகம்செய்கிற இயேசுவின் நாமத்தில், ஆமென் பிதாவே!.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி