கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
இந்த ஆண்டின் கடந்த 9மாதங்கள் நம்மோடிருந்து, தம்முடைய கிருபயினால் நம்மை வழிநடத்தி, 10வது மாதத்தைக் காணச்செய்த நம் கர்ததாதி கர்த்தருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம்.
இம்மாதம் 26ம் தேதி திருச்சபையின் சீர்திருத்த ஞாயிறையும், 31ம் தேதி திருச்சபை சீர்திருத்த தினத்தையும், 28ம் தேதி பரி. செலோத்தே-சீமோன் மற்றும் பரி. யூதா ஆகிய அப்போஸ்தலரின் நினைவு நாட்களையும் ஆசரிக்கிறோம். திருச்சபையானது திருமறைக்கு முதலிடம் அளிக்கிற ஸ்தாபனமாகவும், கிறிஸ்துவின் அவையவங்களாகிய இறைமக்களுக்கு மதிப்பு அளிக்கிற கிறிஸ்துவின் மெய்-சரீரமாகவும் மாற ஜெபத்துடன் நம் ஒத்துழைப்பை நல்குவோம்.
நமது ஊழிய திட்டங்களான ‘ஜெப-ஜன்னல்’ ஜெப நேரங்கள் (அக். 10, 17, 24), ‘அனைவரும்-ஊழியத்தில்’ - கைபிரதி ஊழிய திட்டம், ‘வேதாகம போட்டிகள்’ ஆகியவற்றில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கி றோம். வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), பத்திரிக்கை ஊழியங்கள், காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். .
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.