போட்டி:168 வேத-பகுதி: வெளிப்படுத்தின விசேஷம்
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.
கடைசி நாள்: 25-10-2024
1. பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டபோது அங்கு காணப்பட்டது என்ன?
2. புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டிபோல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது எது?
3. மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடியவர்கள் யார்?
4. ‘உலகனைத்தையும் மோசம்போக்கும் பிசாசு மற்றும் சாத்தான்’ - அது என்ன?
5. ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள் எவை?
6. தன்னை, தீர்க்கதரிசியென்று சொல்லுகிற ஸ்திரீயானவள் யார்?
7. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரின் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்தது என்ன?
8. வானத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் எதற்கு ஒப்பாயிருந்தார்?
9. ‘சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் வெட்கப்பட்டுப்போவான்’ - சரியா தவறா?
10. ‘பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் அளக்கப்பட்டது’ - சரியா தவறா?
11. ‘ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் பூசினான்’ - சரியா தவறா?
12. ‘காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்’ - சரியா தவறா?
13. விருப்பமுள்ளவன் ‘இதை’ இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்:
அ) ஜீவ-தண்ணீர் ஆ) இரட்சிப்பு இ) பாவமன்னிப்பு ஈ) ஜீவ-அப்பம்
14. ‘இவர்’ உண்மையும் சத்திய-சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர்:
அ) ஆவியானவர் ஆ) ஆட்டுக்குட்டியானவர் இ) சர்வவல்லவர்;; ஈ) ஆமென் என்பவர்
15. சிங்காசனத்தில் உட்கார்ந்தவரின் வலது கையிலிருந்த புஸ்தகத்தை ‘இவர்’ வாங்கினார்:
அ) தூதனானவர் ஆ) ஆட்டுக்குட்டியானவர்; இ) ஆசாரியர் ஈ) மூப்பர்
16. ‘இதனால்’ தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று:
அ) எட்டி-காய் ஆ) வெள்ளைப்போளம் இ) கடுக்காய் (ஈ) எட்டி-நட்சத்திரம்
17. பறந்த வந்த, பருந்து அல்ல! வானத்தில் நடுவில், வானம்பாடி அல்ல! கூப்பாடு போட்ட, கோட்டான் அல்ல! அந்தோ, அந்தோ என்ற அபாய மணி! இவன் யார்?
18. கடல் நல்ல கடல், இது கட்டழகுக் கடல்! நீர் இல்லா கடல், இது நெருப்பு உள்ள கடல்! கீத நல் வாத்தியம் சூழ்ந்த கடல்! தேவ நல் கானங்கள் வாழ்ந்த கடல்! இது என்ன கடல்?
19. தூதன் கையில் திறந்தது! தூய்மை உள்ள சிறியது! வாயில் நின்று இனித்தது! வயிற்றில் சென்று கசந்தது! இது என்ன?
20. வீட்டு நம்பர் அல்ல - இது விலங்கின் நம்பர்! மொபைல் நம்பர் அல்ல - இது மனிதனின் நம்பர்! அணிந்துகொள்ளும் ‘ஐடி’ நம்பர்! வாங்க-விற்க ‘ஒ.டி.பி’ நம்பர்! இது என்ன நம்பர்?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463