Salomi
October 2024
கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் – COME LET US ALL INTERCEDE TO GOD

1) அகில உலக சமாதானத்துக்காக... இஸ்ரேல்-ஹாமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர... இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்கதேச பொருளாதாரம் சீரடைய... இயற்கைப் பேரிடர்களின் சேதங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட...

2) இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக... இந்தியாவில் மதவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... நீதிமன்றங்களில் நீதியரசர்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... இந்தியாவில் பதவியேற்றுள்ள புதிய ஒன்றிய அரசு ஜனநாயக மரபுகளை மதித்து அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் பாரபட்சமின்றி செயல்பட...

3) தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக... மக்கள், இன - மத - மொழி வேறுபாடின்றி அமைதியாக வாழ... தமிழ்நாட்டில் விவசாயம், தொழில்கள், வியாபாரம் சிறக்க... அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வர... தமிழ்நாட்டில் மத-வாத பிரிவினை-வாத அரசியல் சக்திகள் கட்டுப்படுத்தப்பட...

4) திருமதி. சுமி ஜேஸ்மின், திருமதி. மெர்லின், திருமதி. பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி. வைலட், திருமதி. சுதா, திருமதி. பிரியா சுதிர், திருமதி. புஷ்பாவதி, திருமதி. ஹனா விஜய் ஆகியோ ருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...

5) பிரி-கே.ஜி முதல் பிளஸ்-2 வரையில் கல்வி பயிலும் நம் பிள்ளைகளுக்காக... தொழில்-முறைக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுகள், நேர்முகத் தேர்வுகளை சந்திக்கும் பிள்ளைகளுக்கு தேவையான ஞானம் வழங்கப்பட...

6) உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகள் எஸ்தர் பெரின், ஜேசன், சிப்ரா, ஜாஸ்மின், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், சை. கிறிஸ்டினா, கிப்ட்சன் தங்கராஜ், பிரின்ஸ் ஜேக்கப், ஜெனிபர், சிந்தியா பிரகாஷ் ஆகியோருக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...

7) திருமதி. லீலா டேவிட், திரு. சுகிர்தராஜன், திருமதி. ஜேஸ்மின் ஞானதாஸ், Rev.கருணாகரன், திரு. நெல்சன் (நகோமி), திரு. வெஸ்லி சாமுவேல், திரு. சுந்தர்சிங், திரு. டெம்பிள் வில்லியம், திருமதி. அன்னாள் ஜெபக்கனி, திரு. அப்பன் டேவிட், திருமதி. ஃபிளாரன்ஸ் ராஜமணி, திரு. ஜூலியன், திரு. அருள்சிங் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...

8) திரு. ஹேமில்டன், திரு. யாபேஸ் சாமுவேல், திருமதி. பால், திருமதி. ராஜேஷ்வரி, திரு. டேனியல், திருமதி. ஐரீன் வாக்கர், திருமதி. ஞானம் ஜெபராஜ், திருமதி. சுந்தரிபாய், திருமதி. ஞானம் ராஜசேகர், திருமதி. செல்வி பாண்டியன், Dr.ஷீபா, திருமதி. ஐலீன் செல்லத்துரை, திருமதி. ரத்னாபாய் சாம், திருமதி. வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...

9) நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி. கிரேஸ் திவ்யா, திருமதி. ஐரீன் வாக்கர், திருமதி. ஜெஸி செல்லதுரை, திருமதி. சிந்தி ஜோஷ்வா, திருமதி. அரோமா சாத்ராக், திரு. சாம்சன் ஆபிரகாம், திருமதி. நிறைமதி ஜாண்ஸன், திரு. எஸ்.ஜே.பி. ராஜா, திரு. அசரியா ஞானதாஸ், திருமதி. வனஜா ஹெர்பர்ட் ஆகியோரின் குடும்பத்தாருக்காக..


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா