ELOHIM HEIMIN
GOD IN WHOM I TRUST
கர்த்தர் என் தயாபரரும், என் கோட்டையும், என் அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவருமானவர். சங்-144:2
God is my Goodness, my Fortress; my high Tower, my Deliverer; my Shield, and whom I trust. psalm-144:2
தமது தேசத்துக்காக வைராக்கியம் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு அக்டோபர் மாத கீர்த்தியின் வாழ்த்துக்கள்.
கொலோ-1:27 கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள்ளே வாசம் செய்கிறார்.
இயேசுதான் என் வாழ்வின் அஸ்திபாரம் எனபோருக்கு:
சங்-5:11 எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாய், அவர்கள் எந்நாளும் ஸ்தோத்திரம் சொல்லுவார்கள்.
சங்-32:8 கர்த்தர் தமது கிருபையால அவர்களை சூழ்ந்தகொள்கிறார்.
சங்-34:22பி கர்த்தரை நம்பின ஒருவர்மேலும் குற்றஞ்சுமராது.
எரே-17:7,8 இயேசப்பாவை நம்பினவர்களை, பாக்கியம் பெற்றவர்களாக அவர் மாற்றுகிறார். வேதவசனம் என்ற தண்ணீரண்டையில் நாட்டுகிறார். நம் வாழ்வின் ஆணி வேராக மாறுகிறார். முதிர்வயதுவரை பசுமையாக, புஷ்டியாக தேவனுக்கு கனி கொடுக்கிற மரத்தைப்போல், என்றென்றைக்கும் அசையாமல் நிலைத் திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் மறுரூபப்படுத்துகிறார
நீதி-29:25பி கர்த்தரை நம்பின நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்.
ஜெபம்: நாங்கள் நம்பும் கன்மைலையே! உம்மைத் துதிக்கிறோம். நெருக்கடியான சூழ்நிலைகளில் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராய் இருந்தீரே! என் பரிசுத்தத் திற்கும், என் எதிர்காலத்துக்கும் ஏற்ற நம்பிக்கையாக இருந்து வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை எனக்குத் தந்தீரே! எங்கள் வாழ்வின் அஸ்திபாரமாய் இருந்தீரே! உமக்கு கோடி ஸ்தோத்திரம் (சங்-9:12). இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே தரப்போகிறீர் உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி