Azariah Gnanadoss
கதை எண்: 186
November 2026

கர்த்தர் கைவிடார்! தேவன் தள்ளிடார்!

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


REX, தந்தையை இழந்து தாயின் அன்பில் வளர்ந்த ஒருவன். அவனது தாய் பல வீடுகளில் கூலிவேலை செய்து REXஐ MA படிப்பு படிக்க வைத்தார்; REX படித்து முடித்து பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், REXம் அவனது தாயும் மனம் தளரவில்லை. இருவரும் ஆலய ஆராதனை களில் கலந்துகொள்வது, வேதம் வாசித்து ஜெபிப்பது, தேவையி லிருப்போருக்கு உதவிசெய்வது என, தூய வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் REXன் தாயார் திடீரென கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் இருந்தார், அந்நாட்களில் REX படித்த பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பள்ளி நிர்வாகம், “பள்ளியின் பழைய மாணவர்களுக்கு 200மீட்டர் ஒட்டப்பந்தயம் நடத்தப்படும் அதில் வெற்றி பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்” என அறிவித்திருந்தது. இதையறிந்த REX, இயேசுவின்மேல் பூரண நம்பிக்கைவைத்து, அப்போட்டியில் கலந்துகொண்டு, தங்க பதக்கத்தை பரிசாக பெற்றான். பரிசை அந்நகரிலுள்ள மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வழங்கினார். பரிசை வாங்கிய REX, “இப்பரிசை நான் பெற எனக்கு உதவிய இயேசுவுக்கும், எனக்காக ஜெபித்த என் தாய்க்கும் நன்றி” என கூறிவிட்டு, அந்த தங்க பதக்கத்தை விற்று தன் தாய்க்கு சிகிச்சை அளிக்கும்படி ஓடிச்சென்றான். அவன் ஓடிச்சென்ற காரணத்தை கேட்டுத் தெரிந்துகொண்ட தலைமை மருத்துவர், விரைந்து சென்று, அவனது தாயாரை தனது ஆஸ்பத்திரியிலே சேர்த்து அவர்கள் உயிரைக் காப்பாற்றி, பரிபூரண சுகம் அடையும்வரை அவர்களுக்கு சிகிச்சை அளித்ததோடு, REXஐயும் தனது மருத்துவ மனையிலேயே பணியமர்த்தி அவன் உயர்ந்த நிலையை அடைய உதவினார். இதன்பின் REXம் அவனது தாயும் தங்களுக்கு வாழ்வளித்த இயேசுவுக்கும், உதவிய டாக்டருக்கும் நன்றிசொல்லி சாட்சியுள்ள வாழ்வு வாழ்ந்தனர்.

பிரியமானவர்களே! நம் வாழ்விலும் துயரம், வியாதி, வறுமை வரும்போது இயேசுவைப் பற்றிக்கொண்டு அவருக்கு பிரியமாக நடந்தால், அவர் REXஐயும் அவனது தாயையும்போல் நம்மையும் மேன்மையாக வைப்பார். கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிற தேவன். இயேசுவை பற்றிக்கொண்டு ஆசீர்வாதங்களையும் பெறுவோம். வேதம் இவ்விதமாய்ச் சொல்லுகிறது:

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு குறைவில்லை. சங் 34:9
கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார். சங் 103:13
கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியை போதிப்பார். சங் 25:12
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையம் அதன் நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்-6:33



M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900