உன்னதப்பாட்டு புத்தகம் முழுவதும்
1-3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,20) 4-12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன
வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-11-2026
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
1. காதலியின் கழுத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம் எதைப்போன்றது என்று காதலன் சொல்கிறார்?
2. உன்னதப்பாட்டு புத்தகம் மூன்று வார்த்தைகள் கொண்ட ஒரு கதறுதலோடு முடிகிறது. அந்த மூன்று வார்த்தைகள் எவை?
3. ‘விருந்து சாலை’ என்ற வார்த்தையை, சத்தியவேதம் மற்றும் திருவிவிலியம் ஆகியவை இணைத்திருமறையில் எவ்வாறு
குறிப்பிடுகின்றன?
4. உன்னதப்பாட்டைப் பாடினது யார்?
5. நேசர் வெண்மையும் சிவப்பமானவர்; அவர் எத்தனைபேர்களில் சிறந்தவர்?
6. சூலமித்தி எவ்வளவு கூட்டத்துக்குச் சமமானவள்?
7. ‘தூதாயீம் பழம் வாசனை வீசும்’ - சரியா தவறா?
8. ‘இதோ மாரிகாலம் சென்றது, மழைபெய்து பொழிந்தது’ - சரியா தவறா?
9. ‘திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது’ - சரியா தவறா?
10. பாகால் ஆமோனிலே சாலோமோனுக்கு ‘இது’ உண்டாயிருந்தது:
அ) அரன்மனை ஆ) தோப்பு இ) திராட்சத்தோட்டம் ஈ) ஆயுதசாலை
11. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; ‘இவை’ பாடும் காலம் வந்தது:
அ) குயில்கள் ஆ) குருவிகள் இ) குழல்கள் ஈ) தும்பிகள்
12. அத்திமரம் காய்காய்த்து, திராட்சக்கொடிகள் பூ,பூத்து ‘இது’ பரிமளிக்கிறது:
அ) வாசனை ஆ) மேனி இ) வண்ணம் ஈ) அழகு
13. கையிரண்டில் வடிந்தது வியர்வை அல்ல!
கைவிரலில் வடிந்தது இரத்தம் அல்ல!
கைப்பிடியில் வடிந்தது எண்ணெய் அல்ல! இது என்ன? இது என்ன?
14. மன்னனின் சிரசில் முடிசூடல்!
மணநாள் தன்னில் முடிசூடல்!
மனமகிழ் தினத்தில் முடிசூடல்! முடி சூட்டியது யார்? முடி சூடியது யார்?
15. மஞ்சம் இது மஞ்சம், மன்னர்-மன்னன் மஞ்சம்!
அஞ்சு டஜன் அரச-வீரர் சூழ்ந்துநிற்கும் மஞ்சம்!
அஞ்சா நெஞ்ச ஆயுத-வீரர் காவல்நிற்கும் மஞ்சம்! இது யாருடைய மஞ்சம்?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463