Amen
THE AMEN
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் ‘ஆமென்’ என்பவர். வெளி.3:14பி
‘Amen’, the faithful and true witness, the beginning of the creation of God. Rev.3:14b
தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிற ஆமென் என்பவரும், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் உடையவருமாயிருக்கிறவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு நவம்பர் மாத, ‘ஆமென்’ வாழ்த்துக்கள்.
வெளி.7:12 ஆமென். எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் எங்கள் மூலமாக உண்டாவதாக, ஆமென்.
யூதா.1:26 தாம் ஒருவரே ஞானமுள்ளவராகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்கு கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மூலமாக உண்டாவதாக, ஆமென்.
ஆமென் என்பவர் என்ன செய்யப்போகிறார்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
சங்.89:51,52 கர்த்தருடைய நாமத்தின் நிமித்தம் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்கள் எல்லாராலும் மடியில் சுமக்கும் நிந்தையையும் நினைத்தருளுகிற கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.
மத்.28:19,20 பரலோக ராஜ்யத்துக்கு ஆத்தும அறுவடை செய்யும்படி, பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்து, உலகத்திற்குள் புறப்பட்டுச்செல்ல அதிகார வல்லமையை தருகிறார். உலகம் முடிவடையும் வரை சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன் என்கிறார்.
ஜெபம்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக. எங்கள் வாழ்வில் அதிசயங்களைச் செய்கிறவர் நீர்; எங்கள் வாழ்க்கை முழுவதும் உமது மகிமையால் நிறைந்திருப்பதாக. இயேசுவின் நாமத்தினால் ஆமென் பிதாவே
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி