கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
2026ம் ஆண்டின் 11வது மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் நித்தியாதி நித்தியர் இயேசுவின் பாதம் பணிவோம். இம்மாதம் 1ம் தேதி சகல பரிசுத்தவான் களின் திருநாள் (ALL SAINTS DAY), 2ம் தேதி சகல ஆத்துமாக்களின் திருநாள் (ALL SOULS DAY), 14ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் - குழந்தைகள் தினம் (CHILDREN’S DAY), 29ம் தேதி அட்வென்ட் ஞாயிறு (ADVENT SUNDAY), 30ம் தேதி அப்போஸ்தலனும் இரத்தசாட்சியுமாகிய தூய. அந்திரேயாவின் திருநாள் (FEAST DAY OF THE APOSTLE AND MARTYR ST. ANDREW) ஆகிய திருநாட்களை நாம் ஆசரிக்கிறோம். இந்தத் திருநாட்களை ஜெபத்துடன் ஆசரித்து, ஆசீர்வாதம் பெற உங்களை அன்புடன் நினைவுபடுத்துகிறோம்
ஜெப-ஜன்னல்-PWPM, வேதாகம-போட்டிகள்-RBKC, அனைவரும்-ஊழியத்தில்-AIMS திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியம், வலைதள ஊழியம் (www.ratchippu.com), புத்தக வெளியீட்டு ஊழியம், காணொலி-செய்தி ஊழியம், ‘நல்ல-விதைகள்’ கைப்பிரதி ஊழியம், NMSI மிஷனரி ஊழியம், திருச்சபை ஊழியம் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். வலைதள பதிவிற்கான லிங்க்: https://magazine.ratchippu.com 2025 ஆண்டு முழுமைக்கும் சரியான பதில்கள் எழுதி பரிசு பெற்றோர் பட்டியல் லிங்க்: https://magazine.ratchippu.com/quizWinners2025.html
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.