வேத-பகுதி: 2 நாளாகமம்
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.
கடைசி நாள்: 25-11-2025
1. எருசலேமில் 3 மாதமும் 10 நாளும் அரசாண்ட யூதாவின் ராஜா யார்?
2. முதியோர் சொன்ன ஆலோசனையை தள்ளிவிட்ட யூதாவின் ராஜா யார்?
3. யூதாவில், கோட்டைகள் - ரஸ்துகளை வைக்கும் பட்டணங்கள் கட்டியது யார்?
4. அபியாவின் கிரியைகள், நடபடிகள், வர்த்தமானங்கள் எதில் எழுதப்பட்டுள்ளன?
5. தன் வியாதியிலும், கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடிய ராஜா யார்?
6. எருசலேம் தேவாலயத்தின் முன் இருந்த 2-தூண்களின் பெயர்கள் என்னென்ன?
7. கேபா-மிஸ்பாவை கட்ட ஆசா ராஜா பயன்படுத்திய மரங்கள்-கற்கள் எவை?
8. புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கியவர்கள் யார்?
9. ‘உத்தமனுக்குக் கர்த்தர் துணை’ - சரியா தவறா?
10. ‘உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு’ - சரியா தவறா?
11. ‘எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்’ - சரியா தவறா?
12. ‘கேருபீன்களின் செட்டைகள் இருபது முழம் சிறிதாயிருந்தன’ - சரியா தவறா?
13. சாலமோன் ராஜா ‘இதனால்’ ஒரு பெரிய சிங்காசனத்தை செய்வித்தான்:
அ) கேதுரு ஆ) பளிங்கு இ) தந்தம் ஈ) வெண்கலம்
14. துன்மார்க்கமாய் நடக்க அகசியாவின் தாய் அவனுக்கு ‘இப்படி’ இருந்தாள்:
அ) துணையாழி ஆ) வழிகாட்டி இ) முன்னோடி ஈ) ஆலோசனைக்காரி
15. ‘இவனுடைய’ நாட்களில் தேசம் 10வருஷம் அமரிக்கையாய் இருந்தது:
அ) ஆசா ஆ) அபியா இ) சாலோமோன் ஈ) தாவீது
16. அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின் ‘இது’ அமரிக்கையாயிற்று:
அ) நாடு ஆ) நகரம் இ) ராஜ்யம ஈ) அரமனை
17. அநியாயம் இங்கு இல்லை, அநீதி இங்கு இல்லை!
பார்ஷியாலிட்டி பலிக்காது, பருப்பு இங்கே வேகாது!
லாவண்யம் வெல்லாது, லஞ்சம் இங்கே செல்லாது! யாரிடம்? இது யாரிடம்?
18. ஆவி இது ஆவி, ஆபத்தான ஆவி!
பலாத்கார ஆவியிது பெலிஸ்தரின் ஆவி!
அரக்கரின் ஆவியிது அரபியரின் ஆவி! யாருக்கு எதிராய் யார் அனுப்பிய ஆவி இது?
19. தூய ஸ்தலம் சென்றேன்! தூபம்காட்ட துணிந்தேன்! கோபம் கொண்டு கனன்றேன்! ரோகம் பெற்று கவிழ்ந்தேன்! நான் யார்?
நான் யார்?
20. இல்லை, இல்லை இங்கே இல்லை! ஆசாவின் நாட்களில் ஆண்டவர் இல்லை! போதனை செய்ய பூஜாரி இல்லை! திருமறை இல்லை,
தியானமும் இல்லை! சென்றால் வந்தால், சமாதானம் இல்லை! எங்கே? இது எங்கே?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463