Elohim Asher Le Mitmahahman
GOD WHO DOESN’T TARRY
என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன். ஏசா. 46:13பி
My salvation shall not tarry; and, I will place salvation in Zion for Israel my glory. Isa. 46:13b
வல்லமையிலும் ஞானத்திலும் பெருத்த மகா நீதிபரரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசி களுக்கு நவம்பர் மாத நிறைவின் வாழ்த்துக்கள்.
ஏசா.49:13 என் இரட்சிப்பு (ஆசீர்வாதங்கள்) தாமதிப்பதில்லை, நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.
ஆப.2:3 குறித்த காலத்துக்கு தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது முடிவிலே அது விளங்கும் (எழும்பும்).
நீடிய பொறுமையுடன் தாமதித்தார். ஏன்?
சாராளுக்கு கர்ப்பம் செத்த நிலை, யோசேப்புக்கு சிறையில் அடைக்கப்பட்ட நிலை, தாவீதுவுக்கு ஆடுகளை மேய்கிற வனாந்தர வாழ்வு, ரூத்துக்கு வயலில் சிந்திக்கிடக்கும் கோதுமை மணிகளை பொறுக்கும் நிலை, லாசருவுக்கு கல்லறையில் அடைபட்ட நிலை, ஆலயம் வந்த கூன் உடைய பெண்ணுக்கு 18 வருட தலைகுனிந்த வாழ்வு. இதுதான் வாழ்க்கை என்ற முடிவி லிருந்து இளந்துளிராக, வறண்ட நிலத்தில் துளிர்க்கிர வேராக எழும்புகிறார். ஏன்? நீ அவரால் முன்குறிக்கப்பட்ட தேவபிள்ளை. எதற்காக? மற்றவர்கள் உன் மீது சொன்ன பழமொழியை, ஒழியப்பண்ணவே. உனக்கு தயைசெய்கிற காலமும் குறித்த நேரமும் வந்ததால், உன்மேல் இரங்கி, எழுந்தருளி உங்களுக்கு சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றி (எசே.12:28, எரே.33:14) நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அல்லேலூயா!
ஜெபம்: முடிவை சம்பூரணமாக எழும்பச்செய்கிற கிறிஸ்துவே! உமக்கு ஸ்தோத்திரம். இந்த காலதாமத காலத்தில் சீர்திருத்தி, ஸ்திரப்படுத்தி, களைபிடுங்கி, பரிசுத்த ஆவியினால் செழிப்பாக்கி, எங்கள் வரப்பை உயரச் செய்து, 2026ம் ஆண்டை நன்மையால் முடிசூட்டி, ஊழியப்பாதையில் நெய்யாய் பொழியும்படி எங்களை ஆசீர்வதிப்பதற்காக ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில், ஆமென் பிதாவே. அல்லேலூயா!
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி