November 2025

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR'S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இவ்வாண்டின் 10மாதங்கள் நம்மோடிருந்து, தம் கிருபையால் நம்மை வழிநடத்தி, 11வது மாதத்தை நமக்குத் தந்த தூயாதி தூயவருக்கு நன்றிகளை ஏறெடுப்போம்.

இம்மாதம் 1ம் தேதி சகல பரிசுத்தவான்களின் திருநாளையும், 2ம் தேதி சகல ஆத்துமாக்களின் திருநாளையும், 14ம் தேதி குழந்தைகள் தினத்தையும், 30ம் தேதி அட்வென்ட ஞாயிறையும் ஆசரிக்கிறோம். திருச்சபையானது கிறிஸ்துவை மேசியாவாகவும் உலகரட்சகராகவும் அடையாளப்படுத்தி ஆசரிக்கும் திருநாள் மற்றும் காலமே இந்த அட்வென்ட காலங்கள். இந்த அட்வென்ட் காலங்களை பிரயோஜனப்படுத்தி மேசியாவாக இவ்வுலகில் பிறக்கும் இயேசுவை வரவேற்க (கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு) தயாராவோம்.

நமது ஊழிய திட்டங்களான ‘ஜெப-ஜன்னல்’ ஜெப நேரங்கள் (நவ. 14, 21, 28), ‘அனைவரும்-ஊழியத்தில்’ - கைபிரதி ஊழிய திட்டம், ‘வேதாகம போட்டிகள்’ ஆகியவற்றில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கி றோம். வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), பத்திரிக்கை ஊழியங்கள், காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா