தன் சொந்த நாடு திரும்பிய பின், 7-வருடங்கள் அக்பருக்கும் போர்த்துகீசிய ருக்கும்; இடையே சிறிய உறவே இருந்தது. கிரேக்க துணை-டீக்கன் லியோன் கிரிமோன் கோவா வழியாகச் சென்றபோது அக்பரின் சபையில் தம் உலக அறிவு மிகுந்த உரையாடலால் அவரை மகிழ்வித்தார். போர்த்துகீசியரின் தூதராக லியோன் கிரிமோனின் சேவைகளைப் பயன்படுத்த அக்பர் முடிவு செய்தார். அக்பரின் செயல்பாடுகளைக் கண்ட டீக்கன் லியோன், அவர் கிறிஸ்து வர் ஆவார் என நம்பினார். கோவாவில் உள்ள தந்தையருக்கு, கடிதம் மூலம் லியோன் கிரிமோன் குறித்த நம்பிக்கையை அக்பர் வெளிப்படுத்துகிறார். இப்படியாக, 2வது மிஷன் பணி எதிர்பாரா விதமாக தொடங்கியது.
திருத்தந்தைகள் எட்வர்ட் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் மே 1591ல் லாகூர் சென்றனர். 7-வருட இடைவெளியை மறந்து அக்பரும் அவர்களுக்கான வரவேற்பு மரியாதை மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றில் குறை ஏதும் வைக்கவில்லை. அவர்களுக்கு வசதியான வீடு கொடுத்து, தமது பிரபுக்கள், மகன் மற்றும் பேரன் கற்றுக்கொள்ள ஒரு போர்த்துகீசிய மொழி பள்ளியைத் தொடங்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால், அக்பரின் ஆணைப்படி ஜெசுவைட்டுகள் பள்ளிக்கூடத்தைத் தொடங்கவில்லை. பல சிரமங்கள் தோன்றியதன் விளைவாக, ஒரு வருட முடிவில் அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். ஆகவே, அவர்கள் செய்ய வந்த பணியை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடித்தனர்.
மூன்றாம் மிஷன் பணி: 3-ம் பணி கி.பி.1595ல் புதிய குழுவின் வருகையுடன் லாகூரில் தொடங்கியது. ஜெசுவைட் மிஷனரிகள் மொகலாய அரசவைக்கு வருகை தந்த முதல் ஐரோப்பியர் குழுவாகும். அவர்கள் 1542ன் ஆரம்பத்தில் கோவாவின் போர்த்துகீசிய காலனிக்கு வந்தனர். அங்கிருந்த கிறிஸ்தவர்களின் நன்மைக்காகவும், வேறு பல விஷயங்களுக்காகவும், அரசரின் அவையில் தந்தையர் இருக்கவேண்டுமென அக்பரின் சொன்னதின்படி அங்கு 3-ஜெசுவைட் மிஷனரிகள் இருந்தனர். ஜெரோம் சேவியர் கி.பி.1595ல் லாகூர் வந்து கி.பி.1615 வரை அங்கு இருந்தார். ஜெரோம் சேவியர் 20-ஆண்டுகளுக்கும் மேல் அங்கு ஒரு சிறந்த தலைவராக பணியாற்றினார்.
சேவியரின் இயற்பெயர் ஜெரோம் டி. எஸ்பெலெட்டா ஒய். கோனி. அவரது தந்தை பிரான்சிஸ் சேவியரின் மருமகன் ஆவார். ஜெரோம் 1549ல் பிறந்தார். அவர் இயேசு சபையில் நுழைந்து, கி.பி.1568ம் ஆண்டு மே 7ம் நாள் சேவியரின் புகழ்பெற்ற பெயரை ஏற்றுக்கொண்டார். சேவியர் செப்டம்பர் 1581ல் இந்தியா வந்தார். ஆறு ஆண்டுகள் கொச்சியில் உள்ள கல்லூரியின் ரெக்டராகப் பணியாற்றினார். சேவியரின் வீடு கோவா வில் இருந்தது. கி.பி.1592ல் கொச்சியில் இருந்த கிறிஸ்தவர்கள் அவரை கொச்சிக்கு அழைத்தனர். அங்கு அவர், பரி. தோமா குறித்து அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெற்றார். கோவாவில் அவர் கழித்த ஆண்டுகள் மகிழ்ச்சியற்றவை. அதற்குக் காரணம், ஸ்பானிய உயர் அதிகாரிகள் மற்றும் போர்த்துகீசிய குடிமக்கள் தந்த பதட்டங்களே.
வன்முறை சர்ச்சை இல்லாமல் முஸ்லிம்களை வெல்வதற்கான சேவியரின் முறை: இதயபூர்வமாக இணைவது. உதாரணமாக, பூட்டிய இதயங்களை திறக்கும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு-மென்மை-நன்மை எனும் சாவி பயன்படுத்தப்பட வேண்டும். கிறிஸ்தவர்கள், தீங்கிழைக்கும் நோக்கத்தால் அல்லாது சத்தியத்தின் மீதுள்ள அன்பினால் உந்தப்பட்டு பேசவேண்டும். தெய்வீக கிருபையால் மட்டுமே, முஸ்லிம்களை இரட்சிப்பு நம்பிக்கைக்குள் கொண்டு வர முடியும். ஆனால், மனமாற்றம் நடைபெறுவதற்கு முன், அவர்களுடைய பகுத்தறிவு அதற்கு சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், முஸ்லீம்கள் தங்கள் மதம் ஒரு பகுத்தறிவு மதம் என்று வாதிடுகின்றனர். ஆகவே, நமது நம்பிக்கைக் கட்டுரைகளை பகுத்தறிவு வாதங்கள் மூலம் நிரூபிக்க முடியும் என சேவியர் நம்பினார்.
சேவியரின் சர்ச்சைக்குரிய படைப்புகளில் மிக முக்கியமானது ‘வாழ்க்கையின் நீரூற்று’. இது சிறந்த அறிஞர்களின் உதவியுடன் போர்த்துகீசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்;டதும், 540 பக்கங்களைக் கொண்டதுமான ஒரு பாரசீக படைப்பாகும். சேவியர், குரானைப் படிக்கவும் அதை லத்தீனில் மொழி பெயர்க்கவும்; விரும்பினார். மட்டுமல்ல, அக்பருன் நீண்ட நேரம் உரையாடி அவரது கிறிஸ்தவ மனப்பான்மையின் தெளிவான அறிக்கையைப் பெறவும் அவர் விரும்பினார். ஆனால் அக்பர் வழக்கம் போல், தாம் உறுதியளித்தபடி, செவிசாய்க்கவில்லை. அக்பர், தக்காணத்திற்கு புறப்பட தயாரானார். அந்த பயணம் அவரை கோவாவின் அருகில் கொண்டு வரும்;; அங்கு அவரது ஓய்வு நேரத்தில் அவர், தந்தையரின் பேச்சைக் கேட்க முடியும் என சேவியர் நம்பினார். முந்தைய ஆட்சியாளர்களிடம் போல் அல்லாது அக்பர் ஆட்சியில் எளிதாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை அறிவிக்க கிறிஸ்தவத் தந்தையர் துணிந்து செயல்ப்ட முடிந்தது. அக்பரின் 10-வருட காலத்தில் திருத்தந்தையர்கள் அக்பருடன் நிலையான உறவில் இருந்தனர். அக்பர் கி.பி.1597ல் காஷ்மீர் சென்றபோதும், கி.பி.1603ல் தக்காணம் சென்றபோதும் சேவியர் மற்றும் கோஸ் ஆகியோர் அவருடன் 2-வருடங்களுக்கு மேலாய் தங்கியிருந்தனர்.
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...