Azariah Gnanadoss
கதை எண்: 180
May 2026

பரிதபிக்க இயேசு உண்டு பரிந்துபேச கிறிஸ்து உண்டு

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


ஜெர்மன் ராணுவத்தில் OSCAR என்;ற ஒரு ஜெனரல் பணியாற்றிவந்தார். அவர் தேவபயம் மற்றும் நேர்மையுடன் இயேசுவின் மாதிரியையும் கடைபிடித்தும் வந்த அதிகாரி ஆவார். OSCARன் தலைமையில் பல ராணுவ அதிகாரிகளும், நூற்றுக் காணக்கான சிப்பாய்களும் பணியாற்றி வந்தனர். அதிகாரிகள், சிப்பாய்கள் மீது புகார்கள் அளித்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி OSCAR ரிடம் பரிந்துரை செய்வது வழக்கம். ஆனால், OSCAR ஒரு நேர்மையான கிறிஸ்தவ அதிகாரி என்பதால், அந்த புகார்களை நம்பி உடனடி முடிவுகள் எடுக்காமல், தீர விசாரித்து, அது உண்மை என்று தெரிந்தால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வந்தார், எனவே அவரை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் HARRY என்ற அதிகாரி, ஒரு சிப்பாய் மீது புகார் ஒன்றை OSCAR இடம் அளித்தார். அதில், “அந்த சிப்பாய் உயர் அதிகாரியாகிய தன்னை மதிப்ப தில்லை; மேலும் அவன் தன் கடமைகளை சரிவர செய்வதில்லை” எனவே, அவன் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டினார். இதுகுறித்து தீர விசாரித்த OSCAR, அந்த சிப்பாய் மீது குற்றம் இல்லை, அது ஒரு பொய்-புகார் என்பதை அறிந்துகொண்டார். இதில், கடவுளின் ஞானத்தை வேண்டிப்பெற்று ஒரு காரியம் செய்தார். HARRY யையும் சிப்பாயையும் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு திடலுக்கு வரவழைத்து, HARRYக்கு 300 சல்யூட்கள் அடிக்க சிப்பாய்க்கு உத்தரவிட்டார். இதற்கு பணிந்த சிப்பாய், எளிதில் 300சல்யூட்கள் அடித்து முடித்தான். ஆனால் உயரதிகாரிகள் அங்கிருந்ததால் பதில்-சல்யூட் அடிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளான HARRY 300பதில்-சல்யூட் அடிப்பதற்குள் சோர்ந்துபோனார். பொய்-புகார் அளித்த HARRYக்கு இவ்விதம் மறைமுக தண்டனை வழங்கிய OSCAR, சிப்பாயை பாராட்டி, தொடர்ந்து உண்மையாய் பணியாற்ற அறிவுரை வழங்கி, பதவி-உயர்வும் அளித்;தார்.

பிரியமானவர்களே! நம் வாழ்விலும், அந்த சிப்பாய்க்கு நேர்ந்ததுபோல், நமக்கு நேரும்போது உயர் அதிகாரியான OSCAR ஐ போல் நமக்ககாக பரிதபிக்கவும், பரிந்துபேசவும் இயேசு சுவாமி நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து, உண்மை-நேர்மை கடைபிடிக்க நம்மை அர்ப்பணிப்போம். வேதம் இவ்வாறு சொல்லுகிறது:

உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்கு பிரியம். நீதி-12:22
என் உண்மையில் பிசகாமல் இருப்பேன். சங்-89:33
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான். நீதி-28:20



M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900