சங்கீதம் புத்தகம் - சங்கீதங்கள் 31 முதல் 60 வரை
3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன
வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-05-2026
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
1. சவுலுக்கு பயந்து தப்பியோடும் தாவீது, சங்.31:3ல் பிதாவாகிய திரித்துவ தேவனை
எவ்வாறெல்லாம் அழைக்கிறார்?
2. இணைத் திருமறையில்; சத்திய-வேதம் (ரேனியஸ் - 1840) கூறுவதுபடி, மரணத்தைக் கடக்க
நம்மை அழைத்துக் கொண்டு போகிறவர் யார்?
3. சங்கீதம்-51க்கு, இறையியலாளர்களில் பலர் வழங்கியுள்ள தலைப்பு என்ன?
4. கர்த்தருக்குப் பயந்தவர்களை சூழப் பாளையமிறங்கி விடுவிக்கிறவர் யார்?
5. ‘கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது’ எது?
6. வானங்களில் விளங்குவது எது? மேகமண்டலங்கள் வரை எட்டுவது எது?
7. ‘சிறுமைப்பட்டவன்வேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்’ - சரியா தவறா?
8. ‘தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்’ - சரியா தவறா?
9. ‘பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் புறப்படுகிறார்’ - சரியா தவறா?
10. துன்மார்க்கருடைய ‘இவைகள்’ முறியும்; நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார்:
அ) ஈட்டிகள் ஆ) புயங்கள் இ) கால்கள் ஈ) சேனைகள்
11. பூமியிலே ‘இவைகளை’ நடப்பிக்கிற கர்த்தரின் செயல்களை வந்து பாருங்கள்:
அ) யுத்தங்களை ஆ) காரியங்களை இ) திட்டங்களை ஈ) பாழ்க்கடிப்புகளை
12. வேஷமாகவே ‘இவன்’ திரிகிறான்; விருதாவாகவே அவன் சஞ்சலப்படுகிறான்:
அ) மதிகேடன் ஆ) மனுஷன் இ) துன்மார்க்கன் ஈ) மாயக்காரன்
13. கேள்வி ஒன்றை கேட்கிறான்... கேவிக் கேவி அழுகிறேன்!
தினம் தினம் கேட்கிறான்... தேம்பித் தேம்பி அழுகிறேன்!
தூஷணமாய் பேசுறான்... துக்கித்துத் துவழ்கிறேன்!
கண்ணீர் வாய்க்குள் போகுது, எலும்பில் ஈட்டி பாயுது! கேள்வி என்ன? கேட்போர் யார்?
14. பச்சைப் பசேல் என்றிருந்தான், பசுமரத்தைப் போலிருந்தான்!
தழைத்திருந்தான், முளைத்திருந்தான் தன்னிலத்தில் வளர்ந்திருந்தான்!
அந்தோ பரிதாபம், அழிந்தொழிந்தான் அவனைக் காணோம்! அவன் யார்?
15. நாற்றமெடுத்த புண்கள், நாள்முழுதும் துக்கம்!
குடல் எரிச்சல், தசை தளர்ச்சி, இதயக் கொதிப்பு!,
எதினால்? இது எதினால்? காரணம் என்ன?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463