Angel C
EPISODE-84
May 2026

தியோஸ் பைர் கட்டானலிகான்

Theos Pyr Katanaliskon

பட்சிக்கிற அக்கினியானவர்

GOD THE CONSUMING FIRE

நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். எபிரேயர்12:29

Our God is a consuming fire. Hebrews 12:29

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு மே மாத வெற்றியின் வாழ்த்துக்கள்.

ஆவியானவர் சொல்லுகிறதாவது:

சக.2:5 தேவ ஊழியர்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அவர்கள் நடுவில் மகிமையாக இருப்பேன்.

எபி.11:39 ஊழியத்துக்காக நாம் வெளியே செல்ல புறப்படும்போது, நமக்கு முன்பாக பட்சிக்கிற அக்கினியாகக் கடந்துபோய், ஏனோக் போன்ற பெரிய-நெடிய சத்துருக்களை அழித்து தேவ ஊழியர்களான நமக்கு முன்பாக விழப்பண்ணுவார். இது தேவனுடைய நீதி.

யாத்.24:17 திருச்சபைகளின் ஆராதனை வேளைகளில் அக்கினியாக இறங்கி வந்து, உங்களோடு பேசுவேன்.

யாத்.19:19 எழுப்புதலின் எக்காள சத்தம் வரவர மிக பலமாய்த் தொனிக்கும்.

ஏசா.30:27,30,33 பட்சிக்கிற அக்கினியாய் என் நாவு வெளிப்படும். பட்சிக்கிற அக்கினி ஜூவாலை யினாலும், இடிபெருவெள்ள கல்மழையினாலும் என் புயத்தின் வல்லமை வெளிப்பட்டு, என் சுவாசம் கெந்தகத் தீயைப்போல் எழும்புவதால் அசீரியன் மற்றும் தோபேத் ராஜா ஆகியோர் நொறுங்குண்டுபோவார்கள்.

யோபு.15:34,30 மாயக்காரரின்கூட்டம் வெறுமையாகி பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களைப் பட்சிக்கும். துன்மார்க்கனுடைய கிளைகள் காய்ந்து, கர்த்தரின் சுவாசத்தால் அற்றுப்போவார்கள்.

மல்.4:1,3 அகங்காரிகளும் அக்கிரமக்காரரும் துரும்பாகி, சாம்பலாயிருப்பார்கள்.

ஜெபம்: இந்திய தேசத்தின் ராஜாதி ராஜாவே! உமக்கு ஸ்தோத்திரம். எங்களை அக்கினி ஜூவாலைகளாக்கி இந்திய தேசத்திலும் தமிழ்நாட்டிலும் நீர் ஒருவரே தெய்வம் என்பதை வெளியரங்கமாக்குவீராக. இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென், அல்லேலூயா.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா