May 2026

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR'S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

2026ம் ஆண்டின் 5ம் மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் ராஜாதி ராஜன் இயேசுவை வாழ்த்திப் பணிவோம். இம்மாதத்தின் 1ம் தேதி உழைப்பாளர் தினம் எனப்படும் மே தினம் (MAY DAY), 14ம் தேதி கிறிஸ்து விண்ணேற்றத் திருநாள் (ASCENSION OF THE LORD), 24ம் தேதி பெந்தெகொஸ்தே திருநாள் (PENTECOST SUNDAY)இ 31ம் தேதி திரித்துவ திருநாள் (TRINITY SUNDAY) ஆகிய திருநாட்களை ஆசரிக்கிறோம். திருச்சபைகளில் இம்மாதத்தில் நம்-பிள்ளைகள் மற்றும் அனைத்து மார்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பங்குபெறும் விடுமுறை வேதாகமப் பள்ளி (VACATION BIBLE SCHOOL-VBS) நடைபெறுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயபக்தியுடன் பங்குபெற்று, மே மாத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்.

கோடைகாலம் தொடங்கிவிட்டது. கோடை விடுமுறைப் பயணங்கள், சொந்த-ஊர் பயணங்கள், உறவுமுறைப் பயணங்கள் ஆகிய பயணங்களில் கவனத்துடன் செயல்பட்டு நம் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக்கொள்வோம். ஜெப-ஜன்னல்’ ‘வேதாகம-போட்டிகள்’ ‘அனைவரும்-ஊழியத்தில்’ ஆகிய நமது ஊழிய திட்டங்களில் பங்குபெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியங்கள், வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், NMS மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

2025ம் ஆண்டில் நாம் நடத்திய இரட்சிப்பு வேதாகமப் போட்டிகளில் பரிசு வென்றவர்களின் பட்டியல் இதழின் அச்சுப்பதிவில் , பக்கம் எண். 20 மற்றும் 21ல் வெளியிடப்பட்டுள்ளது. வலைதள பதிவிற்கான லிங்க்: Quiz Winners 2025

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா