[[]]
Quiz
March 2026

போட்டி எண்:185 ( மார்ச் 2026 )


யோபு புத்தகம்

3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-03-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. ‘நீர் எனக்கு உத்தரவு சொல்லும்’ என்பதை இணைத் திருமறையிலுள்ள ‘சத்திய வேதம்’ எவ்வாறு கூறுகிறது?
2. தெய்வத் திருக்காட்சியில் யோபு கற்றுக்கொண்ட பாடம் என்ன?
3. யோபு, தன் முன்வாழ்வில் பிறந்த 3மகள்களுக்கு இதை தரவில்லை - எதை?
4. ‘விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்’ என யோபுவிடம் கூறியது யார்?
5. ‘மாட்டைப்போல் புல்லைத் தின்னும்’ - அது எது?
6. ‘அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது’ - அது எது?
7. ‘துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்’ - சரியா தவறா?
8. ‘கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு’ - சரியா தவறா?
9. ‘தேவன் மகத்துவமற்றவர்; நாம் அவரை அறிய முடியாது’ - சரியா தவறா?
10. ‘இதை’ கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்:
அ) இரக்கத்தை ஆ) சாபத்தை இ) வழியை ஈ) ஞானத்தை
11. குறுகின ‘இவைகளுக்கு’ முடிவுவருகிறது; நான் திரும்பிவராத வழிபோவேன்:
அ) நாட்கள் ஆ) ஆயுசுகள் இ) வருடங்கள் ஈ) நினைவுகள்
12. உம்முடைய துவக்கம் ‘இப்படி’ இருந்தாலும், முடிவு சம்பூரணமாயிருக்கும்:
அ) குறைவாய்; ஆ) அற்பமாய் இ) சிறிதாய் ஈ) குழப்பமாய்
13. தூஷிக்க தூண்டிநின்ற துணைவி! துணைவனை சாகச்சொன்ன துணைவி!
பரமனை பழிக்கச்சொன்ன பாதகி! பரிசுத்தனை படியச்சொன்ன பாதகி!
இவர் யார்? இவர் இவர்?
14. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று படையாய் வந்தனர்!
ஒட்கங்களை அவர்கள் ஓட்டிக்கொண்டு சென்றனர்!
வேலைக்காரரை அவர்கள் வெட்டிப்போட்டுவிட்டனர்!
அவர்கள் யார்? அவர்கள் யார்?
15. அணுவைப்போல் ஏறும், அவை என்ன?
அடைமழையாய் இறங்கும், அவை என்ன?
மேகத்தில் ஏறும், அவை என்ன? மனிதர்மேல் பொழியும், அவை என்ன? அவை என்ன? அவை என்ன?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா