Sacrifice Image
March 2026
கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் COME LET US ALL INTERCEDE TO GOD

1) அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், இஸ்ரேல்-ஈரான் போர்கள் நிறுத்தப்பட... கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-சிரியா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட... உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர... இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச பொருளாதாரம் சீரடைய... இயற்கை பேரிடர்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட...
2) இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக... இந்தியாவில் மதவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்போரின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்சம் இன்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக மரபுகளையும் அரசியல் சாசனத்தையும் மதித்து, அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாரபட்சமின்றி செயல்பட...
3) தமிழ்நாட்டு மக்கள் இன - மத - மொழி பேதமின்றி ஒற்றுமையோடு நல்வாழ்வு வாழ... தமிழ்நாட்டில் தொழில்கள், வியாபாரம் செழிக்க... புயல், மழை, வெள்ள சேதங்களில் பாதுகாப்பு கிடைக்க... மத-வாத, பிரிவினை-வாத அரசியல் சக்திகள் கட்டுப்படுத்தப்பட...
4) திருமதி.சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5) திருமதி.ஷேரன் ஹெப்சிபா, திருமதி.சுமி ஜேஸ்மின், திருமதி.மெர்லின், திருமதி.பாக்கியா, திருமதி.திலகவதி மகேஷ், திருமதி.வைலட், திருமதி.சுதா, திருமதி.பிரியா சுதிர், திருமதி. புஷ்பாவதி, திருமதி.ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...
6) பிரி-கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை பயிலும் நம் பிள்ளைகளின் ஆண்டிறுதி பொதுத் தேர்வு களுக்காக... சிவா, கிளாட்சன், ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், பிரியங்கா, ஷாலோம், ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் நல்ல மார்க்குகள் கிடைக்க...
7) பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகளின் பொதுத் தேர்வு-செமஸ்டர் தேர்வுகளுக்காக... பார்வதி, பிரேம், ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஸ்மின், சிப்ரா, ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சாம், சிந்தியா பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைக ளுக்கு சிறந்த ஞானம், நல்ல கிரேடு-மார்க்குகள் கிடைக்க...
8) திருமதி. ஷேரன் ஹெப்ஸிபா அவர்களின் சுக பிரசவத்துக்காக...
9) சகோ.சவேரியம்மாள், திருமதி.ஈவ்லின் USA, திருமதி.செல்வி, திரு.லவ்ஸ்லி ஞானதாஸ், திருமதி.ஜேஸ்மின் ஞானதாஸ், திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.லீலா டேவிட், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு.சுந்தர்சிங், திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
10) திருமதி.ராஜேஷ்வரி, திருமதி.சுந்தரிபாய், திரு.ஜெபனேசர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி. ஞானம் ஜெபராஜ், திருமதி.ஞானம் ராஜசேகர், Dr.ஷீபா, திருமதி.ஐலீன் செல்லத்துரை, திருமதி. ரத்னாபாய் சாம், திருமதி.வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
11) நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி.சாரா பாலசிங், திருமதி. ஜெயம் மேரி நெல்சன், திரு.சார்லஸ் சாலோமோன், திருமதி.V.மல்லிகா, திருமதி.லீலா ஜோஸப், திருமதி. ஞானசுந்தரி நாகராஜன், திருமதி.ஐரீன் வாக்கர் (கிரேஸ் திவ்யா), திருமதி.ராணி சாமுவேல்ராஜ், திரு.J.R. டேவிட், திருமதி.ஷைனி ஜேம்ஸ், திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு. S.J.P.ராஜா, திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.வனஜாஹெர்பர்ட் ஆகியோரின் குடும்பங்களுக்காக.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா