O Kyrios Akrogonios Lithos
THE ONE WHO IS THE CHIEF CORNER STONE
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அப்.4:11
This is the stone which was set at nought of you builders, which become the head of the corner. Act. 4:11
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றது மாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய சிலுவைநாதரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு மார்ச் மாத இரக்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
மத்.16:18பி இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை. (எப்படியெனில்)
அப்.4:12 இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே, அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை
1பேது.2:6,7 தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று சொல்லியிருக்கிறது. ஆகையால், விசுவாசிக்கிற உங்களுக்கு, அது விலையேறப்பெற்றது.
சங்.118:22,23 கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பதற்காகவே, அவர் நம்மை பூமியில் பிழைத்திருக்கச்செய்தார். மற்றவர்களால் ஒடுக்கப்பட்ட நம்மை உயர்த்தி மகிமைப்படும்படிக்கு அவர், அவர் உலகத்தாரால் ஆகாதென்று தள்ளப்பட்டார். கர்த்தரின் வலதுகரம் நம்மீது உயர்ந்திருக்கிறது. வலதுகரம் பராக்கிரமம் செய்யும்.
ஜெபம்: கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்; உம்மை துதிக்கிறோம். 1பேதுரு 2ம் அதிகாரத்தின் திருவசனங்களை வாசித்து, கீழ்ப்படிந்து, நல்நடக்கையுள்ளவர்களாய் வாழ்ந்து, மேலான அதிகாரமுள்ள ராஜாவின் கட்டளைகளுக்கு கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படிய, நன்மைசெய்ய, பாடுகளை சகிக்க, சகோதரரிடத்தில் அன்புகூற, எல்லோரையும் கனம்பண்ண, உம் அடிச்சுவடுகளைப் பின்பற்ற பரிசுத்த ஆவியானவரே! உம் கரங்களில் எங்களை அர்ப்பணிக் கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி