Quiz
March 2025

வேதாகம போட்டி-173


போட்டி:170 வேத-பகுதி: உபாகமம்

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும்.

கடைசி நாள்: 25-03-2025

1. அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்கு சுதந்தரமில்லை: யாருக்கு?

2. 120 வயதிலும், கண் இருளடையவில்லை, பெலன் குறையவில்லை - யாருக்கு?

3. ஆரோன் மரித்தபின் அவன் ஸ்தானத்தில் ஆசாரியனானது யார்?

4. திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்கள் யார்?

5. 70பேராய் எகிப்துக்கு போனவர்களை கர்த்தர் திரட்சியில் எதைப்போல் ஆக்கினார்?

6. தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டை எதை உண்டாக்க கூடாது?

7. சாவுக்கு பாத்திரமானவன் எத்தனை சாட்சியின் வாக்கால் கொலைசெய்யப்பட வேணும்?

8. ‘கர்த்தருக்கு பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்’ யார் இவன்?

9. ‘பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக’ - சரியா தவறா?

10. ‘மோசே மரிக்கிறபோது நூற்றிருபத்தாறு வயதாயிருந்தான்’ - சரியா தவறா?

11. ‘போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக’ - சரியா தவறா?

12. ‘இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது’ - சரியா தவறா?

13. சீதோனியர் ‘இதை’ சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்:
அ) எர்மோனை ஆ) சீயோனை இ) ஓரேபை ஈ) யோர்தானை

14. கண்ட இடமெல்லாம் நீ ‘இதை’ இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு:
அ) பலியை ஆ) போஜன பலி இ) பான பலி ஈ) சர்வாங்க தகன பலி

15. உன் பையில் பெரிதும் சிறிதுமான பலவித ‘இவைகளை’ வைத்திருக்கவேண்டாம்:
அ) குச்சிகளை ஆ) அளவைகளை இ) நிறைகற்களை ஈ) உருளைகளை

16. மோசே நேபோ மலையிலிருக்கும் ‘இதன்’ கொடுமுடியில் ஏறினான்:
அ) சீனாயின் ஆ) பிஸ்காவின் இ) கெரிசீம் ஈ) ஏபாலின்

17. உண்ண வேண்டாம், உண்ண வேண்டாம்! ‘உயிரின்-உயிர்’ இதை உண்ண வேண்டாம்! வாழ்ந்திருக்க இதை உண்ண வேண்டாம்! வளம்-பெருக இதை உண்ண வேண்டாம்! தண்ணீர் போல் ஊற்ற வெண்டும்! தரை மீதில் ஊற்ற வேண்டும்! இது என்ன?

18. பதித்திடு, பதித்திடு மனதில் பதித்திடு! கட்டிடு, கட்டிடு கைகளில் கட்டிடு! பேசிடு, பேசிடு பொழுதும் பேசிடு! குறியிடு, குறியிடு நெற்றியில் குறியிடு! எழுதிடு, எழுதிடு வாசலில் எழுதிடு! எதை? இது எதை?

19. நதியின் அக்கரையில் நாச-மலை நேச-மலை! கானான் குடியிருப்பில்; கசப்பு-மலை கனிவு-மலை! ‘மோரே’ சமவெளியில் மோச-மலை பாச-மலை! மலைகள் எவை?

20. அருவருப்பு இது அருவருப்பு, ஆண்டவருக்கு இது அருவருப்பு! அவங்க ‘டிரஸ்’ஸை இவங்க அணிந்தா அருவருப்பு! இவங்க ‘டிரஸ்’ஸை அவங்க அணிந்தா அருவருப்பு! அவங்க யார்? இவங்க யார்?


பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா