Angel C
EPISODE-70
March 2025

“யாவே சாடீய்க்”

Yah’weh Tsaddiyq

நீதிபரர்

THE RIGHTEOUS LORD

நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர் களுக்குத் தீர்ப்புச் செய்கிற சிலுவைநாதரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு சாம்பல் புதன் கிருபையின் நல்வாழ்த்துக்கள்!

ஏசா-11:5 நீதி உமக்கு அரைக்கட்டும், சத்தியம் உமக்கு இடைக்கச்சையுமாய் இருப்பதால் உம்மைத் துதிக்கிறோம் நீதிபரரே.

யோவா-5:22 அன்றியும் பிதாவை கனம் பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம் பண்ணும்படிக்கு பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார்; ஏன்? எதற்கு? தமது கரத்தினான் உருவாக்கப்பட்ட மனிதரின் குற்றங்களை மன்னிக்க, நீதிபரரான தமது குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் என்ன செய்வார்?

2சாமு-23:3 நீதிபரராய் மனுஷரை ஆண்டுகொண்டு, தெய்வபயமாய் துரைத்தனம் பண்ணுவார். ஆதலால் இந்தியாவில் நடப்பது என்ன?

ஏசா-45:24 இயேசு கிறிஸ்துவிடம் மாத்திரமே நீதியும், ஆளுகையும் உண்டென்று இந்திய மக்கள் தங்கள் வாயினால் அறிக்கைசெய்து, சிலுவைநாதரிடம் வந்து சேருவார்கள். சுவிசேஷத்திற்கு எதிரானவர்கள் வெட்கப்பட்டுப்போவார்கள்.

ஏசா-11:4 இந்தியாவில் சுவிசேஷத்தைத் தடைசெய்ய எத்தனிக்கிற துஷ்ட ஆமான்களை நீதிபரர் தம் வசனத்தால் அடித்து, பெண்பிள்ளைகளை கடத்தி விற்பனை செய்கிற துன்மார்க்கரை தமது சுவாசத்தால் சங்கரிப்பார்.

ஜெபம்: நீதிபரரே, எங்கள் இரட்சகரே! உம்மையன்றி வேறே தெய்வம் இல்லை (ஏசா-5:21) என அறிக்கைசெய்து உம்மை வாழ்த்தி வணங்குகிறோம். உமது வார்த்தைகள், எங்கள் மூலம் நிறைவேற எங்களை உம்மைப்போலாக்கும். இயேசுவின் நாமத்தில் ஆமென், பிதாவே.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா