March 2025

Editorial - இயக்குநரிடமிருந்து...

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

இவ்வாண்டின் 3ம் மாதத்தைக் காண கிருபை தந்த நம் கர்த்தாதி கர்த்தருக்கு நன்றிபலி ஏறெடுப்போம். தபசு (லெந்து) காலத்தை இம்மாதம் 5ம் தேதி (சாம்பல் புதன்) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை ஆசரிக்கிறோம். இந்த 40 உபவாச தினங்களிலும், நேரங்களை அட்டவணைப்படுத்திக்கொண்டு உபவாசம் இருந்து ஜெபிக்கவும், சுயத்தை வெறுத்து ‘தேவை’ உள்ளவர்களுக்கு ‘சேவை’ செய்யவும், ஆலய ஆராதனைகளில் பங்குபெறவும், விசுவாசிகளோடு திருமறைத் தியானங்களில் பங்குபெறவும் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறோம். கடவுளை கிட்டிச்சேர்வதற்கு இந்த 40 உபவாச நாட்களை பயன்படுத்திக்கொள்வோம்.

நமது ஊழிய திட்டங்களான ‘ஜெப-ஜன்னல்’ ஜெப நேரங்கள் (மார்ச் 14, 21, 28), ‘அனைவரும்-ஊழியத்தில்’ - கைபிரதி ஊழிய திட்டம், ‘வேதாகம போட்டிகள்’ ஆகியவற்றில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), பத்திரிக்கை ஊழியங்கள், காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள் (தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன). தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா