Azariah Gnanadoss
கதை எண்: 181
June 2026

வேலையில் அஜாக்கிரதை வேதனைகளின் ஆரம்பம்

சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்


SCOTTLAND தேசத்தில், ஒரு பெரிய நீரோடை அருகில் ADAM என்;ற பெயருடைய ஒரு படகோட்டி வாழ்ந்து வந்தான். அந்த நீரோடையின் மறுகரையில் இருந்த சுற்றுலா மையத்துக்கு, இயற்கைக்காட்சிகளை கண்டு களிக்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் கூட்டம்கூட்டமாக வருவதுண்டு. நீரோடையை கடப்பதற்கு வசதியாக, வாடகை படகுகள் அங்கு இயக்கபட்டன. நியாயமான வாடகையில் பாதுகாப்பான சேவையை வழங்கி வந்த ADAM, பயணிகள் மத்தியில் மிக பிரசித்திபெற்ற ஒரு படகோட்டியாக திகழ்தான். ADAMஐ தேடி மக்கள் தினமும் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. குறிப்பிட்ட ஒரு நாளிலே, நகரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் யாரும் காலையில் வரவில்லை. பயணிகள் நெடுநேரம் வராததற்கான காரணத்தை அறியாத ADAM, அன்று தனக்கு வருமானம் வராததை எண்ணி நொந்து சோர்ந்து, வேதனை அடைந்தவனாய், தன் படகை ஒரு மரத்தில் கட்டிவிட்டு படகில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டான்.

இந்நிலையில் 3மணி நேரம் தாமதமாக மதியத்தில் வந்த பயணிகள், ADAMஐ தேடியும் காணாததால் மற்ற படகோட்டிகளின் படகுகளில் ஏறி அக்கரைக்கு சென்றனர். இந்நிலையில், நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ADAM தூங்கிக்கொண்டிருந்த அவனது படகைக் கட்டியிருந்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்ந்து, படகு நீரோடையின் மையத்துக்குச் சென்று நீர்ச்சுழியில் சிக்கி விபத்துக் குள்ளானது. விபத்தில் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஒரு வருடம் சிகிச்சைக்குப் பின்னரே ADAM மீண்டும் தன் பணியை தொடரும் நிலை ஏற்பட்டது.

பிரியமானவர்களே! பயணிகள் வராததுபற்றி தீரவிசாரிக்காமல் அஜாக்கிரதையாய் இருந்ததால் ADAM, பேரிழப்பை சந்திக்க நேர்ந்தது. நம் வாழ்வில், நாமும், பல நேரங்களில் தேவசித்தம் உணராமல் நம் இஷ்டப்படி செயல்படுவதால் எண்ணற்ற துயரங்களைச் சந்திக்கிறோம். எல்லா நிலைகளிலும் தேவசித்தப்படி நாம் செயல்படும்போது, அளவற்ற ஆசீர்வாதங்களுடன் மேலான வாழ்வு வாழமுடியும். வேதம் இவ்வாறு சொல்லுகிறது:

உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்கு பிரியம். நீதி-12:22
என் உண்மையில் பிசகாமல் இருப்பேன். சங்-89:33
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான். நீதி-28:20



M.AZARIAH GNANADOSS M.A; M.ED
EDITOR, RATCHIPPU TAMIL CHRISTIAN MONTHLY, SALIGRAMAM, CHENNAI-93. MOBILE:9962924900