Quiz
June 2026

போட்டி எண்:188 ( ஜூன் 2026 )


சங்கீதம் புத்தகம் - சங்கீதங்கள் 61 முதல் 90 வரை

3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-06-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. ‘நடைகளைக் கண்டார்கள்’ (சங்.68:24) என்பதை, இரட்சிப்பு இணைத் திருமறையில், திருவிவிலியம் மற்றும் பரிசுத்த-பைபிள் எவ்வாறு கூறுகின்றன?
2. சங்கீதம்-68ன் முடிவு என்ன?
3. பிறர் மீதுள்ள பொறாமையின் காரணமாக சங்கீதக்காரரான ஆசாப்பின் விசுவாசம் இடறியபோது, அவர் செய்தது என்ன?
4. யுத்தநாளிலே முதுகு காட்டிய, ஆயுதமணிந்த வில்வீரர்கள் யாவர்?
5. யாருடைய ஆலோசனைசபையில், தேவன் மிகவம் பயப்படத்தக்கவர்?
6. தேவன் எழுந்தருளியிருப்பது எங்கே? அவர் நியாயம் விசாரிப்பது எங்கே?
7. ‘பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது’ - சரியா தவறா?
8. ‘பொய் பேசுகிறவர்களின் வாய் உடைக்கப்படும்’ - சரியா தவறா?
9. ‘கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று நிந்திக்கும்’ - சரியா தவறா?
10. கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு ‘இதை’ பேசி, அடங்குவார்கள்:
அ) உண்மை ஆ) பொய் இ) வசனம் ஈ) இச்சகம்
11. தூதர்களின் அப்பத்தை ‘இவன்’ சாப்பிட்டான்:
அ) யோசேப்பு ஆ) தாவீது இ) நீதிமான் ஈ) மனுஷன்
12. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு ‘இதை’ வழங்காதிரார்:
அ) நன்மையை ஆ) கிருபையை இ) சமாதானத்தை ஈ) ஆஸ்தியை
13. எழுபது அல்லது எண்பது, இது ஸ்பீடு அல்ல!
எதுவாயினும் இது கஷ்டம்தான், நஷ்டம் அல்ல!
எகிறி ஓடுது, ஏறிப் பறக்கிறோம், இது விமானம் அல்ல! இது என்ன?
14. ஒன்றும் இரண்டும் ஒன்றை-ஒன்று சந்திக்கும்!
மூன்றும் நான்கும் முந்திக்கொண்டு முத்தம் செய்யும்!
இரண்டு தரையில் முளைக்கும்! மூன்று வானிலிருந்து நோக்கும்!
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, என்ன? இவை என்னென்ன?
15. கீசோன் நதிக்கரையில் வீழ்ந்தோம், அழிந்தோம்!
எந்தோர் என்னும் ஊரில் எருவாய் போனோம்!
நாங்கள் யார்? நாங்கள் யார்?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா