Elohei Tehillati
GOD OF THY PRAISE
கர்த்தரே உன் புகழ்ச்சி; அவரே உன் தேவன். உபா.10:21
God is thy praise; and, He is thy God. Deu. 10:21
ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை விலக்கின இயேசு ராஜாவின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு ஜூன் மாத புகழ்ச்சியின் வாழ்த்துக்கள்.
சங்.145:4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். அவர் ஒருவரே பெரியவர், புகழப் படத்தக்கவர், ஆராய்ந்து முடியாத மகத்துவத்தை உடையவர் என்று அவரைப் பாடி, பணிந்து, பற்றிக்கொள்கிற உங்களைப் புகழ்ச்சியாக வைப்பார்.
எபே.1:11-19 கிறிஸ்துவினுடைய தீர்;மானத்தின்படியே நீங்கள் முன்குறிக்கப்பட்டு, அவருடைய சுதந்தரமாகி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப் பட்டீர்கள்; எனெனில், அவருக்குச் சொந்தமானவர்கள், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுகிறார்கள். கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையை, இயேசுவை விசுவாசிக்கிற உங்களிடத்தில் காண்பிக்கும் படிக்கு அவர் உங்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தருகிறார்.
எரே.33:9 நான் உங்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியிலுள்ள எல்லா ஜாதிகளின் துதி, கர்த்தராகிய எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையாயும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அல்லேலூயா!
ஜெபம்: சிறையிருப்பைத் திருப்புகிறவரே! உம்மைத் துதிக்கிறோம் (செப்.3;19,20). வெட்கத்தை அனுபவித்த சகல தேசங்களிலும் எங்களை புகழ்ச்சியாக வைக்கப்போகிறீர்; ஸ்தோத்திரம் ராஜா! இயேசுவின் நாமத்தில், ஆமென் பிதாவே. ஆமென், அல்லேலூயா.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி