June 2026

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR'S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

2026ம் ஆண்டின் 6வது மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் வீராதி வீரர் இயேசுவின் பாதம், பணிந்து தொழுவோம். இம்மாதம் 11ம் தேதி அப்போஸ்தலன் பரி. பர்னபாவின் திருநாள் (FEAST DAY OF APOSTLE ST.BARNABAS), 24ம் தேதி பரி. யோவான்ஸ்நானன் பிறந்தநாள் (THE NATIVITY OF ST. JOHN, THE BAPTIST), 29ம் தேதி அப்போஸ்தலர்கள் பரி. பேதுரு மற்றும் பரி. பவுல் ஆகியோரின் திருநாட்கள் (FEAST DAYS OF THE APOSTLES, ST. PETER AND ST. PAUL) ஆகிய திருநாட்களை ஆசரிக்கிறோம்; ஜெபத்துடன் ஆசரித்து, ஆசீர்வாதம் பெறுவோம்.

கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வியாண்டு (NEW ACADEMIC YEAR) தொடங்கிவிட்டது. புதிய வகுப்பறைகளுக்குச் சென்றிருக்கும் நம் பிள்ளைகளுக்கு சுகம், பெலன், ஞானம் வேண்டும். தேவனிடத்தில் வேண்டுதல் செய்து ஞானவரங்களை அவர்கள் பெற்றுக்கொள்ள உற்சாகப்படுத்துவோம்.

ஜெப-ஜன்னல்-PWPM வேதாகம-போட்டிகள்-RBCS அனைவரும்-ஊழியத்தில்-AIMS ஆகிய திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியம், புத்தக வெளியீட்டு ஊழியம், வலைதள ஊழியம் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியம், ‘நல்ல-விதைகள்’ கைப்பிரதி ஊழியம், NMS மிஷனரி ஊழியம், திருச்சபை ஊழியம் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். . வலைதள பதிவிற்கான லிங்க்: Quiz Winners 2025

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா