Quiz
July 2026

போட்டி எண்:189 ( ஜூலை 2026 )


சங்கீதம் புத்தகம் - சங்கீதங்கள் 91 முதல் 120 வரை

1-3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 4,5,6,7,8,19) 4-12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-07-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. ‘வெற்றி’ அல்லது ‘விடுதலை’ என்பதை குறிப்பிடுவதற்கு, சங்கீதம்-98ல் சங்கீதக்காரர் பயன்படுத்தும் வார்த்தை எது?
2. சங்கீதம்-110ல் யூதர்கள் பார்வையில், தாவீதின் குமாரனாக இருக்கவேண்டிய மேசியாவை, தாவீது எவ்வாறு அழைக்கிறார்?
3. எவற்றின் மதிப்பை ஒரு போர் வீரன் நன்கு அறிவான் (சங்கீதம்-91)?
4. பூமி பிளந்து யாரை விழுங்கியது? யாருடைய கூட்டத்தை மூடிப்போட்டது?
5. யாருடைய மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது?
6. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் என்னவாயிற்று?
7. ‘செம்மையானவர்களுக்கு இருளிலே மகிமை உதிக்கும்’ - சரியா தவறா?
8. ‘கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்’ - சரியா தவறா?
9. ‘சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காக உடைத்தார்’ - சரியா தவறா?
10. கர்த்தரின் பிரசன்னத்தினால் ‘இவை’ மெழுகுபோல் உருகிற்று:
அ) இருதயங்கள் ஆ) பனிக்கட்டிகள் இ) பாறைகள் ஈ) பர்வதங்கள்
11. கர்த்தர் ‘இங்கு’ தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்:
அ) வானங்களில் ஆ) பரலோகத்தில் இ) பூமியில் ஈ) லீபனோனில்
12. கர்த்தர் ‘இங்கு’ பெரியவர்; அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்:
அ) வானங்களில் ஆ) உன்னதங்களில்; இ) யூதாவில் ஈ) சீயோனில்
13. மலைகள் மீது நின்றது, மலைத்து விலகிச் சென்றது!
இடிமுழக்க சத்தத்தில், இறங்கி ஏறி விரைந்தது!
ஏறி இறங்கிச் சென்றபின், எல்லைக்குள்ளே நின்றது! இது என்ன?
14. உணவைத்தேடி வழியில் உறுமும்! உன்னதர் தயவில் உணவைத்தேடும்!
உதயசூரியன் ஒளியில் ஒதுங்கும்! உள்ளே-சென்று குகையில் தூங்கும்!
இவை எவை? இது என்ன?
15. இளைஞன் விலங்கில் ஒடுங்கினான்! இரும்புச் சிறையில் அடங்கினான்!
இரண்டு காலில் விலங்கிட! இறைவன் வாக்கு விளங்கிட!
எரிந்து சுத்தமாயினான்! எகிப்தில் அதிபராயினான்!
இவன் யார்? இவன் யார்?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா