Salomi
EPISODE-48
July 2026
இந்திய கிறிஸ்தவ திருச்சபை சரிதை: (1முதல் 21ம் நூற்றாண்டுவரை) தொகுதி-10 பகுதி-1
10. மீண்டும் தாமஸ் கிறிஸ்தவர்கள்:
1. பிரான்சிஸ் ராஸ் - முட்களின் கிரீடம் சபை:

பிரான்சிஸ்கோ ரோஸ், கி.பி.1559ம் ஆண்டு கட்டலோனியா விலுள்ள ஜிரோனாவில் பிறந்தார். கி.பி.1584ம் ஆண்டு இந்தியா விற்கு வந்து வைப்பிகோட்டாவில் உள்ள செமிடிக் மொழிகளின் பேராசிரியரானார். அவர் சிரியாக் மற்றும் மலையாளம் இரண்டையும் கற்க சிரமப்பட்டார். அலிக்சோ டி மெனெசஸா, ஆரம்பகால நவீன மலபாரில் உள்ள புனித தாமஸ் கிறிஸ்தவர் களுடன் தொடர்புடையவரும் அங்கமாலி-கிரங்கனூரின் மார் ஆபிரகாமுக்குப் பிறகு முதல் பேராயராகப் பணியாற்றிபின்னர்; கி.பி.1601ம் ஆண்டு அங்கமாலியின் பிஷப்பாகப் புனிதப்படுத்தப் பட்டவருமான ஒரு காடலான் ஜேசுயிட் ஆவார். கொச்சின் பிஷப் மற்றும் டி மெனெசஸா இடையிலான அதிகார வரம்பு தகராறுகளைத் தீர்ப்பதில் பிரன்சிஸ்கோ ரோஸ் பங்காற்றினார்.

சீரோ-மலபார் திருச்சபையின் கிழக்கு கத்தோலிக்க பிஷப்கள், மார்தோமா சிலுவையை கையில் வைத்திருப்பர்; இது இந்திய செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவர்களின் சிரிய திருச்சபைப் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் குறிக்கும். பிஷப் ரோஸ், சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு முக்கிய நபராக, டி நோபிலியின் அணுகுமுறை திறனுடையதென உணர்ந்தார். மேலும் அவருக்கு தம் ஆதரவையும் வழங்கினார். கி.பி.1615ம் ஆண்டில் ஜேசுவைட் ஜெனரல் கிளாடியோ அக்வாவிவாவுக்கு தனது முறைகள் குறித்த அறிக்கையை அனுப்ப டி நோபிலியை பிஷப் ரோஸ் அனுமதித்தார், நோபிலி பிற மிஷனரிகளிடம் எதிர்கொண்ட விமர்சனங்களையும் எதிர்ப்பையும் சமாளிப்பதில் பிஷப் ரோஸின் ஆதரவு மிக முக்கியமானது. மதுரை மிஷனை நிறுவுவதிலும், மிஷனரிப் பணியில் கலாச்சார தழுவலின் செயல்திறனை நிரூபிப்பதிலும் டி நோபிலி மற்றும் பிஷப் ரோஸ் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது. கி.பி.1624ல் பிஷப் பிரான்சிஸ் ரோஸ் இறந்தபின், பிஷப் ஸ்டீபன் டி பிரிட்டோ பதவியேற்றார்.

முட்களின் கிரீடம்:

இது இயேசுவின் தலையில் வைக்கப்பட்ட உண்மையான கிரீடம் என நம்பப்படும் ஒரு நினைவுச்சின்னம் ஆகும். 13ம் நூற்றாண்டில் மன்னர் லூயிஸ்-IX, முள்களின் கிரீடத்தை கி.பி.1239ம் ஆண்டு கையகப்படுத்தி பின்னர் அதை வைப்பதற்காக பாரிஸில் செயிண்ட்-சேப்பலை கட்டினார். 15மீட்டர் உயரமுள்ள அதன் வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் 1100-க்கும் மேற்பட்ட விவிலியக் காட்சிகளைச் சித்தரித்ததோடு, சிற்றாலயம் முழுவதையும் துடிப்பான ஒளியால் நிரப்பின. பிரெஞ்சுப் புரட்சியின்போது, ‘முட்களின் கிரீடம்’ பிரெஞ்சு தேசிய நூலகத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இது கி.பி.1804ம் ஆண்டில் நோட்ரே-டேமுக்கு மாற்றப்பட்டு பல நூற்றாண்டுகளாக நோட்ரே-டேம் கதீட்ரலில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘முட்களின் கிரீடம்’ இயேசுவின் துன்பம், தியாகம் அவமானம் தெய்வீக அதிகாரம் மற்றும் அரசாட்சியை குறிக்கிறது. இது, மாதத்தின்; முதல் வெள்ளி மற்றும் லெந்து காலத்தில் பொதுமக்களின் வணக்கத்திற்காக காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை உருவாக்க ‘ஜிஸிபஸ் ஸ்பைனா கிறிஸ்டி’ என்ற தாவரம் பயன் படுத்தப்பட்டதாகவும், அதன் மறுபெயர் ‘ஜுஜுப்-மரம்’ என்றும் தெரிகிறது. ‘முட்களின் கிரீடம்’ புனித பொருளாக போற்றப்படுகிறது,

சபை - பேராயர் மற்றும் தலைமை குருக்கள்:

வரலாற்று ரீதியாக, பேராயர் பதவி, பிஷப்பிற்கு உதவிய டீக்கன்களின் தலைவரிடமிருந்து உருவானது. பேராயர், பிஷப் இருவரும் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்தாலும், ஒட்டுமொத்த திருச்சபைப் படிநிலையில் பேராயர்கள் பிஷப்பை விட கீழ்நிலையில் தரவரிசைப்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பிஷப் தடைசெய்யாத வரையில், எந்தவொரு பிஷப்பும் கத்தோலிக்க திருச்சபை முழுவதும் பிரசங்கம் செய்யலாம். மேலும் எந்தவொரு பாதிரியாரும் அல்லது டீக்கனும் எங்கும் பிரசங்கம் செய்யலாம். தேவாலய கட்டிடங்கள், மதகுருமார் நலன் மற்றும் பணி, ஊழியத்தின் வளர்ச்சி போன்ற தேவாலய அம்சங்களை மேற்பார்வையிட, பேராயருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேராயர்கள் மதகுருமார்களுக்கும் மற்றும் சாதாரண தலைவர் களுக்கும் ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

ஆங்கிலிகன் திருச்சபையில், ஒரு ஆர்ச்டீக்கன் என்பவர் ஒரு பிஷப்பிற்குக் கீழே உள்ள ஒரு மூத்த ஆங்கிலிகன் பாதிரியார் ஆவார். பேராயர்கள் பெரும் பாலும் ‘வணக்கத்திற்குரியவர்கள்’ என்று கருதப்படுகிறார்கள். இங்கிலாந்து திருச்சபையில், புதிய பாதிரியார்களை திருச்சபைகளில் சேர்ப்பதில், குறிப்பிட்ட பகுதியில் பிஷப்பின் பிரதிநிதி மற்றும் ஆலோசகராக பேராயர்கள் முக்கிய பங்கு வகித்தனர். ஒரு பிஷப் பெரிய புவியியல் பகுதிகளை மேற்பார்வையிடுவதோடு திருச்சபை கட்டமைப்பிற்குள் அதிக அதிகாரத்தைக் உடையவராய் இருந்தார்; அதே நேரத்தில் பேராயர்கள் ஒரு சிறிய, வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் நடைமுறை நிர்வாகத்தில்தான் கவனம் செலுத்தினர். குறிப்பாக இங்கிலாந்து திருச்சபையில் உள்ள பேராயர்கள் பெரும்பாலும் அரசியல் விஷயங்களில் ஈடுபட்டிருந்தனர், அதே நேரத்தில், பேராயர்கள் தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட திருச்சபையின் உள் செயல்பாடுகளிலும் அதிக கவனம் செலுத்தினர்.



இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...
Author: Dr. Mrs. Salomi Manohar
Asst. Professor Rtd., (Pope’s College, Sawyerpuram) Thiruvanmiyur, Chennai. South India