Angel C
EPISODE-86
July 2026

பாருக் அதோனாய்

Baruch Adonai

ஸ்தோத்தரிக்கப்பட்டவர்

BLESSED IS THE LORD

கர்த்தாவே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். சங்.119:12

Blessed are Thou, O! Lord Psalm 119:12

துதியும், மகிமையம், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலனும் சதா காலங்களிலும் உடையவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசி களுக்கு ஜூலை மாதத்துக்கான கனத்தின் வாழ்த்துக்கள்.

2கொரி.9:15 தேவன் அருளிய சொலலிமுடியாத ஈவுக்காக ஸ்தோத்திரம்.

ஏன் ஸ்தோத்தரிக்க வேண்டும்?

சங்.50:22,14,17 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான். கர்த்தர் செய்கிற சகல நன்மைகளையும் நினைத்துப்பார்த்து ஸ்தோத்தரிக்கும் போது நம் வழிகள் செவ்வைப்படுகின்றன. தேவனுடைய இரட்சிப்பான சகல ஆசீர்வாதங்களும் வெளிப்படுகின்றன. ஆபத்து நேரங்களில் விடுதலை வருகிறது.

மாற்.11:9 முன் நடப்பாரும், பின் நடப்பாரும் ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவா என ஆர்ப்பரித்தனர். திருச்சபையில், நாமும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து அவரை மேன்மைப்படுத்துப்போது, பூமியில் அவருடைய ராஜ்யமாய் நாம் மாறி, பூமிக்கு உப்பாக நாம் ஆசீர்வதிக்கப் படுகிறோம். அல்லேலூயா!

ஜெபம்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. காத்தைப்போல், எங்களுக்கும் விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிற கர்த்தராகிய நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். யூத ராஜ சிங்கத்தின் பெலனால் நிரம்பி, சத்துருக்களின் புயங்களையும் பிசாசின் சதித்திட்டங்களையும் பீறிப்போடுவார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவுமானவர் பொய் சொல்லுகிறதில்லை என்பதை நம் வாழ்வின் மூலம் வெளிப்படுத்துவார். இயேசுவின் நாமத்தில், பிதாவே. ஆமென், அல்லேலூயா.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா