July 2026

இயக்குநர் கடிதம்...

FROM THE MISSION DIRECTOR'S DESK

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

2026ம் ஆண்டின் 7வது மாதத்திற்குள் நம்மை வழிநடத்திய நம் மன்னாதி மன்னர் இயேசுவின் பாதம், பணிந்து தொழுவோம். இம்மாதம் 3ம் தேதி அப்போஸ்தலனாகிய பரி. தோமாவின் திருநாள் (FEAST DAY OF APOSTLE ST.THOMAS) 22ம் தேதி தூய.மேரி மகதலேனாவின் திருநாள் (FEAST DAY OF ST.MARY OF MAGDALENE), 25ம் தேதி அப்போஸ்தலனாகிய பரி. யாக்கோபுவின் திருநாள் (FEAST DAY OF APOSTLE ST.JAMES), 29ம் தேதி புனிதர்களும் இயேசுவின் நட்புகளுமாகிய தூய.மார்த்தா, தூய.மரியா, தூய.லாசரு ஆகியோரின் நினைவு நாள் (MEMORIAL DAY OF SAINTS MARTHA, MARIA AND LAZARUS) ஆகிய திருநாட்களை ஆசரிக்கிறோம்; ஜெபத்துடன் ஆசரித்து, ஆசீர்வாதம் பெறுவோம்.

2026-27 கல்வியாண்டில் நம் பிள்ளைகள் கிருபைவரங்கள் மற்றும் ஞானவரங்களை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு ஜெபத்துடன் உதவிசெய்வோம்.

ஜெப-ஜன்னல்-PWPM, வேதாகம-போட்டிகள்-RBCS, அனைவரும்-ஊழியத்தில்-AIMS ஆகிய திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியம், புத்தக வெளியீட்டு ஊழியம், வலைதள ஊழியம் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியம், ‘நல்ல-விதைகள்’ கைப்பிரதி ஊழியம், NMS மிஷனரி ஊழியம், திருச்சபை ஊழியம் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். வலைதள பதிவிற்கான லிங்க்: https://magazine.ratchippu.com 2015 ஆண்டு முழுமைக்கும் சரியான பதில்கள் எழுதி பரிசு பெற்றோர் பட்டியல் லிங்க்: https://magazine.ratchippu.com/quizWinners2025.html

ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா