Quiz
January 2026

போட்டி எண்:183 ( ஜனவரி 2026 )


கேள்விகளின் கருக்களம்:

1. பரிசுத்த வேதாகமம் (பவர்) நெகேமியா புத்தகம் (12 கேள்விகள்)

2. இரட்சிப்பு பத்திரிக்கை: பக்கம் 2, 19 (3 கேள்விகள்) (நெகேமியா வசனங்கள்)

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

வேதவசன இருப்பிடத்துடன் பதிலளிக்கவேண்டும். கடைசி நாள்: 25-01-2026

மூன்று கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (நெகேமியா-பகுதி), பன்னிரண்டு கேள்விகள் பவர்-பைபிள் எனப்படும் பரிசுத்த வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகிறது. 3-கேள்விகளுக்கான பதில்களை மாத்திரம் இரட்சிப்பு புத்தகத்தில் தேடி எழுதவேண்டும்.

1. ‘ஆகாமியம்’ என்ற சொல்லுக்கு திருவிவிலியம் குறிப்பிடும் வார்த்தை எது?
2. நெகேமியா-9:38ல் புதுப்பிக்கப்பட்டவை யாருடைய உறுதிமொழிகள்?
3. நெகேமியா-9:38ல் காண்பதுபோல், நாம் எவற்றை எழுதிவைக்க வேண்டும்?
4. எவர்களின் வம்ச அட்டவணை நெகேமியாவுக்கு அகப்பட்டது?
5. ஆனானியும், வெறே சிலரும் எங்கிருந்து சூசான் அரமனைக்கு வந்தார்கள்?
6. ஆசாரியனாகிய எலியாசிப் யாரோடு சம்பந்தம் கலந்தவனாயிருந்தான்?
7. வர்த்தகரும், சரக்குகளை விற்போரும் இரண்டொருதரம் எங்கு இராத்தங்கினர்?
8. ‘மீன்வாசலை அசெனாவின் குமாரர் மூடினார்கள்’ - சரியா தவறா?
10. ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’ - சரியா தவறா?
9. ‘நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்’ - சரியா தவறா?
10. எலியாசிப் தொபியாவுக்கு ஆலய பிரகாரங்களில் ‘இதை’ ஆயத்தம்செய்தான்:
அ) ஒரு பலியை ஆ) ஒரு குழுவை இ) ஒரு அறையை ஈ) ஒரு ஆசனத்தை
11. ‘இது’ 52 நாளுக்குள் கட்டப்பட்டு எலூல் மாதம் 25ம் தேதி முடிந்தது:
அ) ஆலயம் ஆ) அரமனை இ) அலங்கம் ஈ) மாளிகை
12. ‘இங்கு’ குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்தவர்களை ஜனங்கள் வாழ்த்தினர்:
அ) யூதேயாவில் ஆ) எருசலேமில் இ) பாபிலோனில் ஈ) கூடாரங்களில்
13. அலவன்ஸ் நான்வாங்கவில்லை! அப்பம் ரசம் கேட்கவில்லை!
பயிர்நிலம் நான் வாங்கவில்லை! பல வருஷம் ரேஷன் இல்லை! நான் யார்? நான் யார்?
14. சக்கந்தம் பண்ணியவனுக்கு, சம்பந்தியாகிவிட்டான்!
அவதூறு சொன்னவனுக்கு, ஆலயத்தில் ரூம் கொடுத்தான்! இவன் யார்? இவன் யார்?
15. சீண்டிப் பார்த்த கடிதம்! சீல் போடாத கடிதம்!
குற்றச்சாட்டுக் கடிதம்! குள்ளநரியின் கடிதம!
அழைப்புவிட்ட கடிதம்! ஆலோசனைக்கு கடிதம்! யார்? எழுதியது? யாருக்கு எழுதியது?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா