17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கம் மற்றும் மிஷனரிப்பணி குறையத் தொடங்கியது. போர்த்துகீசிய மிஷனரிகள் (குறிப்பாக ஜேசுயிட்டுகள்), பண்டைய தாமஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் கடலோர கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவதில் கவனம் செலுத்தினர். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியர்கள், குறிப்பாக டென்மார்க் மற்றும் ஜெர்மன் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள், இந்தியாவுக்கு வந்து, டிரான்க்கியூபார் (தரங்கம்பாடி), கல்கத்தா பகுதிகளில் கவனம் செலுத்தினர்; அவர்கள், 18ஆம் நூற்றாண்டில் வலுவான சமூகங்களையும் நிறுவனங்களையும் நிறுவினர்.
1. டச்சுக் குடியரசு:
17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி, ஒரு
பரந்த காலனித்துவ சாம்ராஜ்யத்தை நிறுவி, அதில் தங்களுக்கென மிகப்பெரிய வணிகக் கட்டமைப்பையும், கடற்படையையும்
வைத்திருந்தார்கள். மட்டுமல்ல, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சுமத்ரா, ஜாவா, மலாய்
தீபகற்பம், போர்னியோ, மொலுக்காஸ் ஆகிய பகுதிகளை; தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் கிழக்கிந்திய
(டச்சு) மற்றும் மேற்கிந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. டச்சு சமூக கிறிஸ்தவம், கேல்வினிசத்தால் மிகவும்
பாதிக்கப்பட்டது, 17ம் நூற்றாண்டில், கேல்வினிசம் ஆதிக்கம் செலுத்தும் மதமாகவும் டச்சுக் குடியரசின் அடையாளமாகவும்
மாறியது. கேல்வினிசத்தை டச்சு குடியரசு ஆதரித்தாலும், நெதர்லாந்தில் கத்தோலிக்கர்கள் மற்றும் மென்னோனைட்டுகள்
உட்பட பிற மதக்குழுக்களின் மக்கள்தொகையே அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுவாக தங்கள் நம்பிக்கையை
சகிப்புத்தன்மையுடன் கடைப்பிடித்தனர்.
டச்சு சீர்திருத்த திருச்சபை, மிஷனரிப்பணி மற்றும் காலனித்துவ விரிவாக்கம் மூலம் உலகளவில் விரிவடைந்தது. ‘டார்ட் சினோட்’ (கி.பி.1618-1619) டச்சு சீர்திருத்த திருச்சபைக்குள் இருந்த இறையியல் சர்ச்சைகளை சரிசெய்து அதன் இறையியல் கோட்பாடுகளை உறுதிப் படுத்தியது. திருச்சபை நிர்வாகத்தில் சாதாரண உறுப்பினர்கள், மூப்பர்கள், வார்டன்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் சர்ச் விவகாரங்கள் மற்றும் நிதிகளை மேற்பார்வையிட்டனர். 17ம் நூற்றாண்டில், டச்சு, உலகளாவிய பொருளாதார மற்றும் கடல்சார் சக்தியாக மாறியது. ஆனால், 17ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஆங்கிலோ-டச்சுப் போர்கள் (கி.பி.1652-1674) மற்றும் பிராங்கோ-டச்சுப் போர் (கி.பி.1672-1678) ஆகியவை டச்சு அதிகார வீழ்ச்சிக்கு வித்திட்டது.
2. பிரிட்டிஷ் அரசு:
ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே இங்கு கிறிஸ்தவம் இருந்தது;
எனினும், ஆங்கிலேயர் வணிகத்தோடு கிறிஸ்தவத்தைப் பரப்புவதிலும் முக்கிய பங்கு வகித்தனர். இந்திய புராட்டஸ்டன்ட்
சபையாக நிறுவப்பட்ட இங்கிலாந்து திருச்சபை, அதன் அடையாளத்தை முழுமையாக உறுதிப்படுத்தியது. சமூக சீர்திருத்தங்களில்
ஆங்கிலேய மிஷனரிகளின் பங்கு அளப்பெரியது. ஆனாலும், காலனித்துவம் மற்றும் கலாச்சார ஏகாதிபத்தியத்திற்காக அவர்கள்
விமர்சனங் களை எதிர்கொண்டனர். கத்தோலிக்கம், பியூரிட்டன் ஆகிய பிரிவுகள், இந்திய புராட்டஸ்டன்ட் திருச்சபைக்கு
அதிக சவால்களை அளித்தன.
பக்திவிருத்தி, பைபிள் மீதான அதிகாரம் மற்றும் எளிமையான வழிபாட்டு முறை ஆகியவற்றுக்கு பியூரிடன்கள்; அளித்த முக்கியத்துவம், இங்கிலாந்து திருச்சபையுடன் மோதலுக்கு வழிவகுத்தது. ஆங்கில உள்நாட்டுப்போர் (கி.பி.1642-1651) மத பதட்டங்களால் தூண்டப்பட்டது, இதில் பியூரிடன்களின் பங்கு அதிகம். போருக்குப் பிறகு, பியூரிடன்களின் வாரிசுகள், பல்வேறு சீர்திருத்தப் பிரிவுகளை உருவாக்கினர். கி.பி.1689ம் ஆண்டு சகிப்புத்தன்மைச் சட்டம், எதிர்ப்பாளர்களான புராட்டஸ்டன்ட்டுகளுக்கு வழிபாட்டு சுதந்திரத்தை வழங்கியது. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை, சீர்திருத்த இறையியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
ராயலிஸ்டுகளும் (இங்கிலாந்து திருச்சபை ஆதரவு) பியூரிஸ்ட்களும் (பியூரிட்டன் ஆதரவு) உள்நாட்டு மோதலில் ஈடுபட்டனர். பைபிள், பொது-பிரார்த்தனை நூல் ஆகியவை பிறமொழி சொற்களை கடன்வாங்கி தங்கள் சொற்களஞ்சியத்தை வடிவமைத்தன; இதனால், இந்தியாவில் ஆங்கிலமொழிப் பயன்பாடு அதிகரித்தது. அதேசமயம், பலமொழி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட தால், ஆங்கில மொழிவளம் பாதிக்கப்பட்டது.
16ம் மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஆங்கில சீர்திருத்தம் நடைபெற்றது. இங்கிலாந்து திருச்சபை தனது ‘பொது பிரார்த்தனை’ புத்தகத்தை கி.பி.1662ல் மீள்பதிப்பு செய்து தனது ஆங்கிலிகன் பங்கை உறுதிப்படுத்தியது. கி.பி.1757 முதல் 1858 வரை, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டது.
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...