theos pou basilevei
GOD THAT REIGNETH
அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேனாகிய கர்த்தர் இராஜ்யபாரம்பண்ணுகிறார். வெளி.9:6பி
Alleluia! The Lord God omnipotent, reigneth. Rev. 9:6b
தமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிற, இருக்கிறவரும் இருந்தவரும், வருகிறவருமானவரின் நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு மகத்துவங்கள் நிறைந்த புதிய ஆண்டின் நல்வாழ்த்துக்கள்.
தானி.7:2-7 வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும், மகத்துவமும் உன்னதமானவரின் பரிசுத்தவான்களாகிய நமக்கும் நம் தலைமுறைக்கும் கொடுக்கப்படும். அவர்கள், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
எரே.10:17 இந்திய தேசத்தில் ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் இயேசு தெய்வத்துக்கு ஒப்பானவர் இல்லை என்பதை அறிந்து பயப்படுவார்கள்.
2நாளா.36:22,23 தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகள், பரிபூரணமாக நிறைவேறுகிற ஆண்டாக, ஆலயங்கள் கட்டப்படுகிற ஆண்டாக, இந்திய ராஜ்யம் இயேசு கிறிஸ்துவை பிரஸ்தாபிக்கிற ஆண்டாக மறுரூபப்படுவதற்காக ஸ்தோத்திரம்.
2நாளா.20:30, 2சாமு. 7:12,16 கிறிஸ்துவின் சந்ததிகளை எழும்பப்பண்ணி, அவர்கள் ராஜ்யத்தை நிலைப்படுத்தி யுத்தமில்லாத இளைப்பாறுதலை கட்டளை யிட்டதினால் பரலோக ராஜ்யப்பணிகள் அமரிக்கையாய் இருக்கப்போவதற்காய் கோடி ஸ்தோத்திரம்!
ஜெபம்: எங்கள் தேசத்தின்மீதும், தேவபிள்ளைகள்மீதும் ராஜய்யபாரம் செய்கிற கிறிஸ்துவே! உம்மைத் துதிக்கிறோம். நெகே.9:21-25ன்படி, ராஜயங்களை தேவபிள்ளைகளிடம் ஒப்புக்கொடுத்து, சத்துருக்களின் மேட்டிமையை மிதித்து, பரலோக தலைமுறைகளை வானத்தின் நட்சத்திரங்கள் போல பெருகச்செய்து, அரணான பட்டணங்களை, செழுமையான பூமியை, சகல ஆசீர்வாதங் களை சுதந்தரித்து, தேவதயவால் விருட்சமாகி, கீழே வேர்பற்றி, மேலே கனி கொடுக்கச் செய்யும் கர்த்தருடைய வைராக்கியத்துக்காக நன்றிசொல்லுகிறோம், பிதாவே. அல்லேலூயா! ஆமென்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி