கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
2025ம் ஆண்டு முழுதும் நம்மோடிருந்தவரும், 2026ம் ஆண்டிற்குள் கிருபையாய் நம்;மைக் கொண்டுவந்த வருமாகிய நம் கர்த்தாதி கர்த்தருக்கு தோத்திர பலிகளை ஏறெடுப்போம்.
இம்மாதம் 1ம் தேதி புத்தாண்டையும் (NEW YEAR), 6ம் தேதி பிரசன்னத் திருநாளையும் (EPIPHANY), 11ம் தேதி இயேசுவின் ஞானஸ்நானத்தையும் (BAPTISM OF JUSUS), 25ம் தேதி பரி.பவுல் குணப்பட்ட திருநாளையும் (CONVERTION OF ST.PAUL), 26ம் தேதி பரி. தீத்து மற்றும் பரி. தீமோத்தேயுவின் திருநாட்களையும் (FEAST DAY OF ST.TITUS AND ST.TIMOTHY) திருச்சபை ஆசரிக்கிறது. திருச்சபையோடு இணைந்து இந்த திருநாட்களை ஆசரித்து மகிழ்வோம்.
ஜெப-ஜன்னல் ஜெப நேரங்கள் (ஜன.9, 16, 23), ‘அனைவரும்-ஊழியத்தில்’ கைபிரதி ஊழியம், வேதாகம-போட்டிகள் ஆகிய நமது திட்டங்களில் பங்குபெற உங்களை அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியங்கள், வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.