சகோ. எம். அசரியா ஞானதாஸ் எம்.ஏ; எம்.எட்
காட்டில், கொடிய மிருகங்களால் சாதுவான விலங்குகளுக்கு பல ஆபத்துக்கள் நேரிடுவதுண்டு. விலங்குகள் தங்கள் குட்டிகளுக்கு பாதுகாப்புப் பயிற்சிகளை அளிக்கும் திறன், அவற்றுக்கு இறைவன் கொடுத்த வியத்தகு வரமாகும். யானைகள் பெரிய விலங்குகள் தான்; எனினும், அவை அநேக ஆபத்துகளை சந்திக்கவேண்டிய நிலையில் உள்ளன. யானைக் குட்டிகள் துஷ்ட மிருகங்களிடமிருந்து தப்பியோடும்போது குழிகளில் விழுந்துவிட்டால், அதிக ஆபத்து ஏற்படுகிறது. இச்சூழலில், வியத்தகு விதத்தில் குட்டிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை அளிக்கும் திறன், யானைகளுக்கு கிடைத்த தெய்வ வரமாகும்.
எப்படியெனில், யானைகள் கூட்டம், சென்றுகொண்டிருக்கும்போது சிறிய குழிகளை காணும் யானைகள் வேண்டுமென்றே தங்கள் குட்டிகளை குழிக்குள் தள்ளிவிட்டு, கூடவே தாங்களும் குழிக்குள் விழுந்து பின்னர் குழியிலிருந்து வெளியேற, குட்டிகளுக்கு ஒரு மாதிரியை காண்பித்து, குட்டிகள் வெளியே வரும் வரை காத்திருந்து, குட்டிகளுக்கு பயிற்சிi;ய வழங்குகின்றன. இதைப் போன்றே குட்டிகள் வளர வளர பெரிய குழிகளில் தள்ளி விட்டு பயிற்சியை வழங்குகின்றன. முடிவில், குட்டி யானைகள், எவ்வளவு பெரிய குழியாயினும் அதிலிருந்து மீண்டுவரும் திறனைப் பெற்றுவிடுகின்றன. யானைகள் தங்கள் குட்டிகளை துன்புறுத்தும் நோக்குடன் குழிகளில் தள்ளிவிடுவதில்லை; மாறாக, தங்கள் குட்டிகளின் நன்மைக்கென்றே அப்படிச் செய்கின்றன.
பிரியமானவர்களே! நம் வாழ்விலும்கூட, நாம் சாத்தானின் சோதனைகள் மற்றும் ஆபத்து களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இயேசு கிறிஸ்து நம்மேல்; அன்புகூர்ந்து, குட்டி யானைக்கு பெரிய யானை பயிற்சி அளிப்பதுபோல் நம்மை பயிற்றுவிக்கிறவராய் இருக்கிறார். நாம் தாங்கிக்கொள்ளத்தக்கதான சோதனைகளைத்தான் நம் வாழ்வில் கடவுள் அனுமதிப்பார். எனவே, ஏன் எனக்கு இந்த சோதனை? என நாம் கேள்வி கேட்காமல், இயேசுவின் வல்ல கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் வாழ்வோம்.
வேதம் இவ்வாறு கூறுகிறது:
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை சோதனையினின்று இரட்சிக்கிக்கிறார். 2பேது-2:9
கர்த்தாவே ! யுத்தத்துக்கு என்னை பலத்தால் இடைகட்டினீர். 2சாமு.22:40
கர்த்தர் என் கைகளை யுத்தத்துக்கு பழக்குவிக்கிறார். 2சாமு.22:35