Quiz
January 2026

போட்டி எண்:184 ( பிப்ரவரி 2026 )


எஸ்தர் புத்தகம்

3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் 12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன

வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-02-2026

படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா

1. ‘எஸ்தர்-உபவாசம்’ எனப்படும் உபவாசத்தின் மறுபெயர் என்ன?
2. ‘செத்தாலும் சாகிறேன்’ என்பதை இணை திருமறைகள் எவ்வாறு கூறுகின்றன?
3. ‘எஸ்தர்-உபவாசம்’ சாதாரண விடுதலை அல்ல - எந்த விடுதலையை அளித்தது?
4. சூசான் அரமனையில் 500பேரைக் கொன்று நிர்மூலமாக்கியவர்கள் யார்?
5. ஆகாகியனான ஆமானுடைய மனைவியின் பெயர் என்ன?
6. ராஜாத்தியாகிய எஸ்தர் உட்காருகிற மெத்தைமீது விழுந்துகிடந்தது யார்?
7. ‘சூசான் நகரம் கலங்கிற்று’ - சரியா தவறா?
8. ‘ஆமானின் பத்து குமாரருடைய உடலையும் எரித்தார்கள்’ - சரியா தவறா?
9. ‘சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது’ - சரியா தவறா?
10. ராஜஸ்திரீயான வஸ்தியும் அரமனையில் ‘இவர்களுக்கு’ விருந்து செய்தாள்:
அ) பிரபுக்களுக்கு ஆ) பாடகருக்கு இ) பிரதானிகளுக்கு ஈ) ஸ்திரீகளுக்கு
11. ‘இவரின்’ கட்டளை பூரீம் நாட்கள் பற்றிய வர்த்தமானங்களை திடப்படுத்தியது:
அ) எஸ்தர் ஆ) ஆமான் இ) அகாஸ்வேரு ஈ) வஸ்தி
12. இரட்டுடுத்தியபடி ‘இதன்’ வாசலில் பிரவேசிக்க ஒருவருக்கும் உத்தரவில்லை:
அ) ஆலயம் ஆ) அரமனை இ) கொலுமண்டபம் ஈ) கன்னிமாடம்
13. ஓ.. ஓ.. மரமே, உயர்ந்த மரமே!
ஓர் இரவுக்குள் வளர்ந்த மரமே!
வளர்த்தவன் உயிரைக் குடித்த மரமே! இது என்ன மரம்?
14. மாளிகை வாயிலில் அமர்தவன், மஹாராணிக்கு நான் அண்ணன்!
மன்னரின் உயிரைக் காத்ததென் நேர்மை!
மருவிய மக்களை மீட்டதென் பெருமை! நான் யார்? நான் யார்?
15. பேரரசின் தலைநகரம், ‘பேலஸ்’ இருந்த பெருநகரம்!
கட்டளையின் தலைநகரம், கலங்கிற்று இந்த பெருநகரம்!
ஆணையின் தலைநகரம், ஆர்ப்பரித்த பெருநகரம்! எந்த நகரம்? இது எந்த நகரம்?



பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா