Angel C
EPISODE-81
February 2026

யாவே மேகன் ஈனு

Yahweh Meganenu

கேடகமுமானவர்

GOD OUR SHIELD

கர்த்தரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங். 33:20

The Lord is our help and our shield. Ps. 33:20

சத்துவத்தையும் பெலனையும் அருளுகிற இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் இரட்சிப்பின் விசுவாசிகளுக்கு பிப்ரவரி மாத கிருபையின் நல்வாழ்த்துக்கள்.

கர்த்தர் யாருக்கு கேடகமாக இருக்கிறார்?

சங்.33:20 ‘என் அப்பா என்னுடன் என்ன பேசப்போகிறார்’, என்று சொல்லி கர்த்தருக்கு காத்திருக்கிற ஆத்துமாக்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

நீதி.30:5 தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார்.

ஆதி.15:1, 14:16,23 தேவனைவிட்டு பின்மாற்றமடைந்த சகோதர சகோதரிகளுக்காக திறப்பிலே நின்று அவர்களை தேவனிடமாய் திருப்புகிறவர்களுக்கும் மற்றும் தேவைகளுக்காக கர்த்தரிடம் தங்கள் கரங்களை உயர்த்துகிறவர் களுக்கும் அவர் மகா பெரிய பெலனும் கேடகமுமாயி ருக்கிறார். எதிரிகளின் கண்களுக்கோ, குருட்டாட்டத்தின் ஆவியை அனுப்புகிறார் (ஆதி.19:11).

எபே.6:16 பொல்லாங்கன் எய்யும் அக்கினி ஆஸ்திரங்களை அவித்துப்போடத் தக்கதாக, விசு வாசத்தின் ஆவியானவர் நம்மை நிரப்புகிறார். சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற் கொள்ளுகிற வல்லமையைத் தருகிறார். வேதத்தில் உள்ள ஆவிக்குறிய இரகசியங்களை அறிந்து கொள்ளும்படிக்கு, இந்த லெந்து காலத்தின் நம்முடைய மனக்கண்களைத் திறக்கிறார். அல்லேலூயா!

2சாமு.22:36 இரட்சிப்பின் கேடகத்தைத் தருகிறார். ‘ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்களுக்குறியது’ என்ற விசுவாசத்தைத் தருகிறார். அல்லேலூயா!

ஜெபம்: எங்களுக்கு பலத்த அரணாயிருந்து, எங்கள் வழிகளை செவ்வைப்படுத்துகிறவரும், எங்கள் கேடகமுமான கர்த்தரே! உம்மைத் துதிக்கிறோம். வெண்கல வில்லும் எங்கள் புயங் களால் வளையும்படி, எங்கள் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிற உம்முடைய கரங்களில் எங்களை அர்ப்பணிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஆமென், பிதாவே.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரி
C. ANGEL

தொகுப்பு: சகோ. சி. ஏஞ்சல் B.SC திருநெல்வேலி, தென்னிந்தியா