கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
2026ம் ஆண்டின் 2ம் மாதத்தை காண கிருபைசெய்த தேவாதி தேவனுக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம்.
பிப். 2ம் தேதி இயேசுவை குழந்தையாக தேவாலயத்தில் அர்ப்பணித்த திருநாள் (PRESENTATION OF THE LORD), 18ம் தேதி சாம்பற் புதன் (ASH WEDNESDAY) 24ம் தேதி அப்போஸ்தலனாகிய பரி. மத்தியாவின் திருநாள் (FEAST DAY OF APOSTLE ST. MATHIAS), தபசு காலத்தின் வெள்ளிக்கிழமை சிறப்பு நண்பகல்-மாலை தியான ஆராதனைகள், தபசுகாலத்தின் ஞாயிறு சிறப்பு ஆராதனைகள், உபவாச ஜெபங்கள், திருமறைத் தியானங்கள் ஆகியவற்றில் பயபக்தியுடன் பங்குபெற்று லெந்து காலத்தில் உபவாசம்-ஜெபம்-ஈகை போன்றவற்றை கடைபிடித்து தேவாசீர்வாதம் பெற உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
‘ஜெப-ஜன்னல்’ ‘வேதாகம-போட்டிகள்’ ‘அனைவரும்-ஊழியத்தில்’ ஆகிய நமது ஊழிய திட்டங்களில் பங்குபெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பத்திரிக்கை ஊழியங்கள், வலைதள ஊழியங்கள் (www.ratchippu.com), காணொலி-செய்தி ஊழியங்கள், புத்தக-வெளியீட்டு ஊழியங்கள், கைப்பிரதி ஊழியங்கள், மிஷனரி ஊழியங்கள், திருச்சபை ஊழியங்கள் ஆகிய நமது ஊழிய இயக்குநரின் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ஜெப-விண்ணப்பங்கள், அனுபவ சாட்சிகள் மற்றும் காணிக்கைகள் அனுப்புவோர் நமது ஊழிய இயக்குநரின் பெயருக்கு அனுப்பிவையுங்கள். தகவல் தொடர்பு விபரம், வங்கி விபரம், UPI விபரம் மற்றும் QR CODE ஆகியவை Contact-us பகுதியில் தரப்பட்டுள்ளன. தேவகிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.