தாமஸ் கிறிஸ்தவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்கள் சிறிய உலகில் பல நூற்றாண்டுகளாக அமைதியில் வாழ்ந்தனர். இந்நிலையில் மேற்கத்திய வல்லரசின் கப்பல்களில் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களின் வரவு உள்ளுர் கிறிஸ்தவர்களுக்கு தொந்தரவாக அமைந்தது. அவர்களுக்கு இதில் மகிழ்ச்சி இல்லை. அவர்களின் தொடர்புகள் பாபிலோனின் பாரம்பரிய குருத்துவ வழியில் வந்த கிறிஸ்தவ மண்டல வாரிசு களால் பராமரிக்கப்பட்டு வந்தது. செர்ராவில் அனேக ஆண்டுகள் பிஷப் இல்லாத ஒழுங்கற்ற நிலை இருந்தது. ஆனால், கி.பி.1502 நவம்பர் 19ல் நிகழ்ந்த வாஸ்கோடகாமாவின் கொச்சி வருகை (2ம் பயணம்), கிழக்கு மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவர்களுக்கு இடையில் ஒரு முறையான தொடர்பை ஏற்படுத்தியது.
ஒரு காலத்தில் தாமஸ் கிறிஸ்தவர்களுக்கு பெலியார்டே என்ற ராஜா இருந்தார். பின்னர், கொச்சியின் ராஜாவுடைய அதிகாரத்தில் அவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்த ராஜா கிறிஸ்தவர்கள் மீது அதிக அதிகாரம் மற்றும் உரிமை கொண்டிருந்ததாகத் தெரிகிறது. கிறிஸ்த வர்கள் கொச்சியின் ராஜாவுக்கு 50,000 படை வீரர்களை வழங்கினர் என்றும் இவர்கள், குறி தவறாமல் துப்பாக்கி சுடும் திறன் படைத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அந்நாட்களில், மொத்த மக்கள் தொகையான 45,000ல் தாமஸ் கிறிஸ்தவர்கள் மாத்திரம் 30,000 பேர் இருந்ததாக லோப்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். 60தேவாலயங்கள் இருந்தன. ஒவ்வொரு சபையிலும் சராசரியாக 600பேர் என அதிகபட்சம் 36,000கிறிஸ்தவர்கள் இருந்திருக்கலாம் என தெரிகிறது. கிறிஸ்தவர்கள் உள்ளுர் ஆட்சியாளர்களிடமிருந்து பல கஷடங்களை எதிர்கொள்ள வேண்டி யிருந்தது, உள்ளுர் ஆட்சியாளர்களில் பெரும்பாலும் இந்துக்களாயிருந்தனர். அவர்கள் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது உயர்மட்ட நடவடிக்கை எடுத்தல், உரிமைகளை பறித்தல், இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுத்தல், அடக்குமுறை செய்தல் என அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்தனர். இதன் காரணமாக, கிறிஸ்தவர்கள் கிராங்கனூர் மற்றும் கொய்லானின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளிலுள்ள மலைகள்வரை சிதறிவிட்டனர்.
சிறுபான்மையான கிறிஸ்தவர்கள் மீது எப்போதுமே அடக்குமுறை இருந்துவந்தது. தாமஸ் கிறிஸ்தவர்களின் தலைவர்களிடம் கணிசமான அதிகார வரம்புகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் போர்த்துகீசிய மதகுருமார்கள் இதை விரும்பவில்லை. பிரான்சிஸ்கன்கள், ஜேசுயிட் களை நேரில் சந்திப்பது அரிதாகவே இருந்தது. தாமஸ் கிறிஸ்தவர்களில் சிலர் போர்த்துகீசியர் களுடன் நட்பாக இருந்தனர், எனவே அவர்கள் போர்த்துகீசியருடன் இணைந்து செயல்பட்டனர்.
கி.பி.15ம் நூற்றாண்டின் இறுதியில் பிஷப்கள் இல்லாமல் இருந்த குறைபாடு சரிசெய்யப்பட்டது. கி.பி.1490ல் கிழக்கத்திய கத்ததோலிக்க தேசபக்தர் மார் சைமன் என்பவருடன் மூன்று கிறிஸ்தவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். ஒருவர், வரும்-வழியில் உயிரிழந்தார்; மற்ற இருவரும் பத்திரமாக வந்து சேர்ந்தனர். அவர்களின் திறமையை உணர்ந்த போர்த்துகீசிய அரசு, கி.பி.1504ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு இந்தியர்களுடன் இணைந்து செயல்பட ஆயர்கள் அனுப்பி வைத்தது.
இந்திய திருந்சபையில் மெசபடோமிய திருச்சபையின் தாக்கம் இருந்தது. இரண்டு ஆயர்கள் அனுப்பப்பட்டதன் மூலம் திருச்சபை புத்துயிர் பெற்றது. புதிய பேட்ரியார்க், எலியாஸ் மேலும் நான்கு ஆயர்களை பிரதிஷ்டை செய்வதன் மூலம் ஊழியத்தை வலுப்படுத்த முடிவு செய்தார். அவர்களில் முதன்மையானவ ரான ராபன் டேவிட் மெட்ரோபாலிட்டனாக நியமிக்கப்பட்டார். அவருடன் ஜார்ஜ், மார் டென்ஹா மற்றும் மார் ஜேக்கப் என்று அழைக்கப்படும் ரபன் மசூத் ஆகிய நால்வரும் ஆயர்களாக நியமிக்கப்பட்டனர். நீண்ட காலமாக ஆயர்கள் இல்லாத நிலையில் இந்த நால்வரும் வந்தபோது, விசுவாசிகள் மகிழ்ச்சியடைந்து சுவிசேஷங்கள் மற்றும் மெழுகுவர்த்தி களுடன் சென்று அவர்களை தேவாலயங்களுக்குள்ளே அழைத்துச்சென்று பாடல்கள் மற்றும் சங்கீதங்கள் பாடி மகிழ்ச்சியுடன் அவர்களை பிரதிஷ்டை செய்து நியமித்தார்கள். மேலும் அவர்களுக்கு உடைகள் மற்றும் பணம் கொடுத்து உதவினார்கள்.
கி.பி.16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாமஸ் கிறிஸ்தவர்களின் செயல்கள் மிகவும் மூர்க்கத் தனமாக இருந்தன. நற்கருணையில் மதுவைப் பயன்படுத்தினர் என்றும் இது அவர்களின் பண்டைய சிரியாக் வழிபாட்டு நடைமுறைக்கு பொருந்தாதது என்றும் சில போர்த்துகீசியர் அறிக்கை வெளியிட்டனர். இந்த தவறான போர்த்துகீசிய புரிதல் பின்னாளில் சமரசம் செய்யப் பட்டது. தாமஸ் கிறிஸ்தவர்கள் மேற்கத்திய கிறிஸ்தவர்களை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்; அவர்கள் இறக்கும் நாள் வரை தூய. தோமா அப்போஸ்தலன் கற்பித்த பண்டைய விசுவாசத்தை பராமரித்தார்கள் என்பது உண்மை. போப்பின் கூற்றுப்படி, எந்த வகையிலும் இந்தியாவில் தாமஸ் கிறிஸ்தவர்கள் குறைத்து மதிப்பிடப்படவில்லை
இந்திய கிறிஸ்தவ திருச்சபை வரலாறு தொடரும்...